தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » படையினருக்கு மேலும் 40 ஆயிரம் பேரை இணைப்பதற்கு முடிவு!!

படையினருக்கு மேலும் 40 ஆயிரம் பேரை இணைப்பதற்கு முடிவு!!

Written By paadumeen on Thursday, May 21, 2009 | 6:25 PM

விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டதாகக் கூறும் சிங்களப் படையின ருக்கு மேலும் 40 ஆயிரம் பேரை இணைப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ள பிரதேசங்களில் சட்டத்தினையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்காக சிறிலங்கா இராணுவத்தில் மேலும் 40,000 பேரை இணைத்துக்கொள்ள தாம் எதிர்பார்ப்பதாக அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு பேச்சாளாரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார் என ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்த செய்தில் மேலும், நாட்டில் தற்போது பலப்படுத்தப்பட்டுள்ள பாது காப்பு நடைமுறை மேலும் சில நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும். தேவையேற் படின் அந்தப்பாதுகாப்பு நடைமுறை மேலும் நீடிக்கப்படலாம் என்று அமைச்சர் கெஹெலிய ரம்பக்வெல தெரிவித்துள்ளார். இதேவேளை வடக்கில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் காவற் துறை மற்றும் முப்படைகளில் ஆண், பெண் இருபாலரினதும் 40 அயிரம் பேரை இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அந்த நடவடிக் கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.விடுதலைப் புலிகளுடனான கடந்த இரண்டு வருடப் போரில் சுமார் 40 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டும், காயம டைந்தும் களமுனையைவிட்டு அகற்றப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment