தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com

அடிப்படை வசதிகளற்ற நிலையில் குருநகர் வைத்தியசாலை! நோயாளிகள் சிரமத்தில்.

Written By paadumeen on Monday, February 20, 2012 | 6:42 PM

Monday, February 20, 2012

குருநகர் சவச்சாலைச் சந்தியில் அமைந்துள்ள அரச பொது வைத்தியசாலையில் நோயாளர் களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாததால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் ணொருவர் அங்குள்ள வசதியீனங்கள் காரண மாக உயிராபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிய வருகிறது. அப்பெண் ணுக்கு அதிகாலையில் பிரசவம் நடந்த போதி லும் பலமணி நேரமாகியிம் நஞ்சுக் கொடி அகல வில்லை. அங்கே இரவு நேரங்களில் வைத்தியர் கடைமையிலிருப்பதில்லை. தாதியர்களே பிரசவத்தைப் பார்க்கின்றனர். எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தநிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்காக வைத்தியருக்கும் அம்புலன்சுக்கும் அறிவித்தபோதும் அப்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. எனவே தனியார் வாகனத்தில் கொண்டு செல்ல முற்பட்ட போது நோயாளியை தூக்கிச் செல்வதற்குரிய ‘ஸ்ரெச்சர்’ வைத்தியசாலையில் இல்லை. எனவே பிரசவ வேதனையுடன் அப்பெண்ணைச் சிரமத்தின் மத்தியில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

மக்கள் செறிந்து வாழும் சூழலில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெறவரும் நோயாளர்களின் அடிப்படை வசதிகளையும் உபகரணக் குறைபாடுகளையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Read More | comments

மீள்குடியமர்வுக் கொடுப்பனவு இல்லை! 5,739 குடும்பங்கள் பாதிப்பு!

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவில் மீளக் குடியமர்ந்த 5ஆயிரத்து 739  குடும்பங்களுக்கு இதுவரை மீளக்குடியமர் வுக்கான கொடுப்பனவான 20 ஆயிரம் ரூபா இதுவரை வழங்கப்படவில்லையெனத் தெரி விக்கப்படுகிறது.

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்திற்குட்பட்ட 42 கிராம சேவகர் பிரிவுகளில் 21ஆயிரத்து 793 குடும்பங்கள் மீளக் குடியமர்ந்துள்ளன. இவ்வாறு 20 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொள்ளாத குடும்பங்கள் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு தினமும் அலைந்து திரிகின்றன. ஆனால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது. எனவே உரிய அதிகாரிகள் இதனைப் பெற்றுத் தரவேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More | comments

விலை கூட்டி விற்றால் நடவடிக்கை!

எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலை யில் அத்தியாவசிய பொருட்களின் விலை களை உரிய விலையில் விற்பனை செய்யாது அதிகப் படியான விலைகளில் விற்பனை செய்யும் வர்த் தகர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள் ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு அலு வல்கள் அமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை நிர்ணயிக்கப் பட்ட விலைகளுக்கு ஏற்ப விற்பனை செய்யாது மேல திக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தேடுதல் நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் நாடு பூராகவும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் பொருட்களை உரிய விலையில் விற்பனை செய்யாது அதிகப் படியான விலை களில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக தாம் கடுமையான நடவடிக்கை எடுக்கவுள் ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Read More | comments

அனைத்து இலங்கை மீனவர்களும் விடுதலை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த அனைத்து இலங்கை மீனவரும் ஏற்கனவே விடுதலை செய்யப் பட்டுள்ளதாக இந்தியாவுக் கான இலங்கை உயர்ஸ் தானிகராலயம் தெரிவிக்கின்றது. இலங்கை அரசாங் கத்திற்கும் இந்திய அதிகாரிகளுக்கு இடையில் இடம் பெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள் ளதாக இந்தியாவுக் கான இலங்கை உயர்ஸ் தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். விடுதலை செய்யப்பட்டுள்ள இறுதி 25 மீனவர்களும் இன்னும் சில தினங் களில் நாடு திரும்புவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் இந்தியா வின் பல பகுதிகளிலும் கைதுசெய்யப்பட்ட 125 மீனவர்கள் தடுத்து வைக்கப் பட்டி ருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் கட்டம் கட்டமாக அவர்கள் விடுவிக்கப் பட்டதாகவும் பிரசாத் காரியவசம் மேலும் சுட்டிக்காட்டினார்.
Read More | comments

பீரிஸ் ஜெனீவா பயணமானார்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஜெனீவா சென் றுள்ளார். வெளி விவகார அமைச்சர் இன்று அதிகா லை 2.55 அளவில் புறப்பட்டுச் சென்றதாக கட்டு நாயக்க விமான நிலையத் தகவல்கள் குறிப் பிடுகின் றன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் எதிர் வரும் 28 ஆம் திகதி ஜெனிவா வில் ஆரம்பமாகவுள்ளது. இதில் கலந்து கொள்வதற் காக அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் அனுர பிரியதர்ஷன யாப் பா ஆகியோர் விரைவில் ஜெனீவாவிற்கு பயணமாக வுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித் துள்ளது.
Read More | comments

பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளராக வேட் வட்மோர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப் பாளராக இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணி களின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டேவ் வட் மோர் நியமிக்கப்படவுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் இடைக்கால பயிற்று விப்பாளராக மொய்சீன்கான் செயற்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் நிறுவனத்தை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் இந்த செய்தியை வெளி யிட்டுள்ளது. பங்காளதேஷில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண தொட ரில் பங்கேற்றவுள்ள பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக வட்மோர் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து தொடரின் பின்னர் பயிற்று விப்பாளர் பதவியில் இருந்து மொய்சீன் கான் விடுவிக் கப்படவுள்ளதுடன், அடுத்த இரண்டு வருடங்களுக்கு வட்மோர் பயிற்று விப்பாள ராக செயற்படவுள்ளார். 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக 57 வயதான டேவ் வட்மோர் செயற் பட்டிருந்தார்.

இதனையடுத்து 2003 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரை பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய வட்மோர், பங்களா தேஷிற்கு முதலாவது டெஸ்ட் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
Read More | comments

முத்தரப்பு ஒருநாள் தொடர்! 110 ரன்களில் இந்தியா படுதோல்வி

முத்தரப்புத் தொடரின் 7-வது ஆட்டத்தில் ஆஸ்தி ரேலியாவிடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது இந்தியா. முதலில் துடுப்பெடுத் தாடிய ஆஸ்திரே லியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது. பின்னர் துடுப் பெடுத் தாடிய இந்தியா 43.3 ஓவர்களில் 178 ரன்
களுக்கு ஆட்டமிழந்தது. 

ஆஸ்திரேலியாவின் பென் ஹில்பெனாஸ் 5 விக் கெட்டுகளையும், பிரெட் லீ 3 விக்கெட்டுகளை யும் வீழ்த்தி இந்திய அணியைச் சரிவுக்குள்ளா க்கினர்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டொஸ் வென்ற ஆஸ்திரேலிய கப்டன் பாண்டிங் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். டேவிட் வார்னரும், மேத்யூ வேடும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் குவித்தனர். 46 பந்துகளைச் சந்தித்த வார்னர் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து பதான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த பாண்டிங் 7 ரன்களில் ஜாகீர்கான் பந்துவீச்சில் தூக்கியடிக்க அது எல்லைக் கோட்டருகே பதானிடம் கேட்ச் ஆனது. 67 பந்துகளைச் சந்தித்த மேத்யூ வேட் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த பீட்டர் ஃபோரஸ்டும், மைக் ஹசியும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். ஃபோரஸ்ட் நிதானமாக ஆடினாலும், மைக் ஹசி அதிரடியாகவே விளையாடினார்.

45 பந்துகளில் அரைசதம் கண்டார் மைக் ஹசி. அவர் 52 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஃபோரஸ்ட் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் ஜோடி சேர்ந்த டேவிட் ஹசி-டேனியல் கிறிஸ் டியன் ஜோடி இந்திய பெüலர்களை பதம்பார்த் தது.

வினய் குமாரின் ஓவரில் தொடர்ந்து 4 பவுண் டரிகளை விளாசினார் கிறிஸ்டி யா ன். இதனா ல் ஆஸ்திரேலியா 50 ஓவர்களி ல் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது. ஹசி 26 ரன்களும், கிறிஸ்டியான் 18 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்தியத் தரப்பில் பதான் அதிக பட்சமாக 3விக்கெட் வீழ்த் தினார்.

289 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடத்தொடங்கிய இந்திய அணி தொடக்கத் திலேயே ஆட் டம் கண்டது. கம்பீர் 5, சச்சின் 3, ரோஹித் 0, கோலி 12 என அடுத் தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலைக் குத் தள்ளப்பட்டது இந்தியா.

பின்னர் தோனியும், ரெய்னாவும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் குவித்தனர். 41 பந்துகளைச் சந்தித்த ரெய்னா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரெய்னா-தோனி ஜோடி சேர்த்த 46 ரன்களே, இந்த ஆட்டத்தில் இந்திய இணை குவித்த அதிகபட்ச ஸ்கோர்.

பின்னர் வந்த ஜடேஜா 18 ரன்களில் ஆட்டமிழக்க, தோனியுடன் இணைந்தார் இர்ஃபான் பதான். இதனிடையே தோனி அரை சதமடித்தார். 84 பந்துகளைச் சந்தித்த அவர் 1சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 27பந்துகளைச் சந்தித்த இர்ஃபான் பதான் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டாக ஜாகீர்கான் 9 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியாவின் இன்னிங்ஸ் 43.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலியத் தரப்பில் பென் ஹில்பெனாஸ் 5 விக்கெட்டுகளையும், பிரெட் லீ 3 விக்கெட்டு களையும் வீழ்த்தினர். ஹில்பெனாஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் இந்தியாவை 110 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம் ஆஸ்தி ரேலியாவுக்கு போனஸ் புள்ளியோடு சேர்த்து மொத்தம் 5 புள்ளிகள் கிடைத்தன. இதன்மூலம் 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா. இந்தியா 10 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இலங்கை 7 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, ஆரம்பத்தில் நிதானமாக ஆடியதால் 40 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 187 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டேவிட் ஹசி மற்றும் டேனியல் கிறிஸ்டியன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் கடைசி 10 ஓவரில் அந்த அணிக்கு 101 ரன்கள் கிடைத்தன. இதனால் வலுவான ஸ்கோரை எட்டியது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலிய பேட்டிங்கின்போது 29-வது ஓவரை வீசினார் ரெய்னா. இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் மைக் ஹசியை ஸ்டெம்பிட் செய்தார் தோனி. இதையடுத்து ஹசி அவுட்டா, இல்லையா? என்பதை அறிய மூன்றாவது நடுவரின் உதவியை நாடினார் கள நடுவர். டி.வி. ரீபிளேயில் பார்த்தபோது ஹசி அவுட் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து "நாட் அவுட்' பொத்தானை அழுத்துவதற்குப் பதிலாக "அவுட்' பொத்தானை மாற்றி அழுத்தியதால் டிஜிட்டல் பலகையில் "அவுட்' என்று அறிவிப்பு வெளியானது. இதை சற்றும் எதிர்பாராத ஹசி வேகமாக வெளியேறினார். அதற்குள் தவறு நிகழ்ந்திருப்பதை உணர்ந்த கள நடுவர் பில்லி பெüடன், ஓடி வந்து ஹசியை அழைத்து மீண்டும் விளையாட வைத்தார். அப்போது ஹசி 1 ரன்னில் இருந்தார். அதன்பிறகு தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், 59 ரன்கள் குவித்ததோடு, ஆஸ்திரேலியாவைச் சரிவிலிருந்தும் மீட்டார்.
Read More | comments

மாலைதீவு அமைச்சரவை விரிவாக்கம்: முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கு வெளியுறவுத் துறை


மாலைதீவின் புதிய ஜனாதிபதி முகமது வாஹீத் தனது தலைமையிலான அமைச்சரவையை நேற்று விரிவாக்கம் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அதிபரான மெயுமூன் கயூமின் மகள் துன்யா மெயுமூனுக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதவி அளிக்கப் பட்டுள்ளது.

ஆனால் முக்கிய அமைச்சான வெளியுற வுத் துறைக்கு இன்னும் கபினட் அமைச்சர் நியமிக் கப்படவில்லை. இஸ்லாமிய விவகாரத் துறை அமைச்சராக ஷேக் முகமது ஷாகீம் அலி சயீத் தும், வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக முகமது மியூசும் நியமிக்கப்பட்டுள் ளனர்.

இதேவேளை பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத், விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார். இது போன்ற நிலையில் புதிய ஜனாதிபதி தனது தலைமையிலான அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாலை தீவில் புதிய அரசுக்கு எதிராக முகமது நஷீத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாட்டில் அசாதாரண சூழல் நிலவுகிறது. எந்த நேரத்தில் எது நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

இதனிடையே, மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில் கொமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாலேவில் புதிய ஜனாதிபதியை சனிக்கிழமை சந்தித்த அக்குழுவினர் விரிவான ஆலோ சனை நடத்தினர். இந்தச் சந்திப்பின் போது, மாலைதீவில் அரசியல் குழப்பம் ஏற்படு வதற்கான காரணம் என்ன என்பது குறித்தும், தற் போதைய சூழலுக்கு எவ்வாறு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கான காரணம் குறித்து கொமன் வெல்த் நாடுகள் அமைச்சர்கள் குழு நடத்தும் விசாரணைக்குத் தாம் முழு ஒத்துழை ப்புத் தருவதாக புதிய ஜனாதிப தி முகமது வாஹீத் உறுதி அளித்துள்ளதாகவும் ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
Read More | comments

ஈரானுடன் நல்லுறவைப் பேணுவது வருங்காலத்தில் இந்தியாவுக்கு சவாலாக அமையும்- சிஐஏ

டில்லியில் கடந்த திங்கட்கிழமை நடை பெற்ற கார்குண்டு சம்பவம் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை, அமெரிக்கப் புலனாய்வு அமைப் பான சிஐஏ இந்தியா வுக்குத் தெரிவித்துள்ள தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலியத் தூதரக அதிகாரி தால் எஹோசிவா பயணம் செய்த காரில் காந்த வெடிகுண்டு பொருத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தால் படுகாயமடைந்தார். இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத் தில் ஈரான் தீவிரவாத இயக் கத்துக்கு தொடர்பு இருப்பதாக இஸ்ரேலும், அமெரிக்காவும் குற்றம்சாட்டின.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏ தான் கண்டறிந்த புலனாய்வுத் தகவல்களை இந்தியப் புலனாய்வு அமைப் புகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகவல்களில் தாக்குதல் சம்பவத்தில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்யும் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் ஈரானுடனான ராஜதந்திர உறவுகளைப் பேணும் விதமாக இந்தச் சம்பவம் குறித்து இந்தியா கருத்து ஏதும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்தபோதிலும் அமெரிக்கா அளித்தத் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து கருத்து கூற அவை மறுத்துவிட்டன.

சிஐஏயின் முன்னாள் உத்தியோகஸ்தரான லிசா கர்டிஸ் இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், இஸ்ரேலியத் தூதரக காரின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்திய-ஈரான் உறவில் ஓர் கரும் புள்ளியாக அமைந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்தில் ஈரானின் பங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்நாட்டைக் கண்டிப்பது தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை என்றார்.

ஈரான் தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவது, கண்டனம் தெரிவிப்பது ஆகிய நடவடிக்கைகளில் இந்தியா மிதமான போக்கையே கடைப் பிடிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். தாக்குதல் சம்பவத்துக்குப் பின் ஈரானுடன் நல்லுறவைப் பேணுவது, அந்நாட்டின் அணு உலைத் திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடனான நெருடல்களைச் சமாளிப்பது ஆகியவை வருங் காலத்தில் இந்தியாவுக்கு சவாலாக அமையும் என்றும் கர்டிஸ் கூறினார்.

குண்டு வெடிப்பு குறித்து இந்தியப் புலனாய்வு அமைப்புகளின் முடிவுக்காகக் காத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரி யா நுலண்ட் தெரிவித்துள்ளார். மேலும் புலனாய்வு தகவல்கள் ஈரானைச் சுட்டிக் காட்டினால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஜு குற்றம்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது. ஈரானில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தீவிர வாதத்துக்கு எதிராக வலுவான, திட்டமிட்ட நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
Read More | comments

நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்

பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி கால மானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டிருந்த இவர் நேற்று நள்ளிரவில் காலமானார். திரையுலகின் நடிப்பு தாகத்தால் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவரது உடல் சாலி கிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் விருது நகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த கிராமத் தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எஸ்.என்.லட்சுமி பின்னாளில் சிறந்த குணசித்திர நடிகையாகப் பரிணமித்தார்.பல திரைப்படங்களில் அம்மா பாட்டி வேடங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர். குறிப்பாக விருமாண்டி, மகாநதி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப் பைப் பாராட்டாதவர் இருக்க முடியாது.

சர்வர் சுந்தரம் படத்தில் கண்டிப்பான கதாபாத்திரத்தில் அவர் தோன்றும் காட்சிகள் படத்துக்கு வலுவூட்டின. தேனும் பாலும் படத்தில் சரோஜா தேவிக்கு தாயாக மைக்கேல் மதனகாமராஜன் படத்தில், ஊர்வசியின் பாட்டியாக மகாநதியில், கமலின் மாமியாராக தேவர் மகன் படத்தில், கிளைமாக்ஸில் வரும் காட்சிகளில் என அவருடைய நடிப்புலக பயணம் மிக நீண்டது.

நாடகங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவாஸ்டேஜ் ,ஞானதேசிகர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் நாடக கம்பெனிகள், கே.பாலசந் தரின் ராஹினி கிரியேஷன்ஸ் உள்ளிட்ட நாடக கம்பெனிகளில் நடித்து மெருகேறி யவர்.

திரையுலகில் நலிந்த கலைஞர்களுக்கு உதவும் மனம் கொண்டவர். விழா நேரங் களில் வலியச் சென்று பலருக்கு உதவிகள் புரிந்தவர்.
Read More | comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டவரை மிரட்டி கையெழுத்து வாங்கிய யாழ் பொலிஸார்.

Written By paadumeen on Sunday, February 19, 2012 | 5:38 PM

Sunday, February 19, 2012

பொலிஸார் ஒருவரைக் கைது செய்யும் போது ஏன் கைது செய்கின்றோம் என்று அவர்களுக்கு முதலில் தெரிந்திருக்க வேண்டும். தவிர கைதுக் கான காரணத்தை தெரிவித்த பின்னரே கைது செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்டு கைதுக்கான காரணத்தைத் தேடுவது சட்டத்துக்கு முரணானதாகும்.

ஒருவரைக் கைது செய்துவிட்டு வேறு காரணங் களைப் பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய சம்பவமொன்று அண்மை யில் குடாநாட்டில் இடம்பெற்றுள்ளது. பொருட்களைத்திருடிய குற்றச்சாட்டில் யாழ் நகர் மற்றும் நாவாந்துறை யைச் சேர்ந்த. இருவருக்கு எதிராக கோப்பாய் பொலிஸாரால் வழக்குப் பதிவு செய்யப் பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.

சந்தேக நபர்களில் ஒருவர் பிறிதொரு குற்றச்சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச் சாட்டில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ் சிறைச்சாலை யில் விளக்கமறியலில் வைக்கப்படார். சிறைச்சாலைக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார் அந்தச் சந்தேக நபரிடம் சட்ட த்துக்கு முரணான வகையில் மிரட்டி கையெழுத்துப் பெற்றுள்ளனர். அதாவது வாக்குமூலம் பெறுவதாகக் கூறி உள்ளே சென்ற அவர்கள் சிங்களத்தில் குற்ற முறைப்பாடு ஒன்றை எழுதி சந்தேக நபர் களுக்குப் புரியாத வகையில் வாக்கு மூலத்தைப் பதிந்து விட்டு அதில் சந்தேக நபர் களிடமிருந்து கையொப்பமும் பெற்றுள்ளனர்.

அதில் சந்தேக நபர்கள் சம்மந்தப்பட்டிராத மேலும் நான்கு வழக்குகளை கொள்ளை வழக்குகளுடன் சம்மந்தப்பட்டவர்கள் எனத் தெரிவித்து வழக்குப் பதிவு செய்துள் ளதாக சட்டத்தரணி செலஸ்ரீன் மன்றில் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து திருட்டு சம்பந்தமான வழக்கு விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தவழக்கு யாழ் நீதிமன்றில் நீதிவான் ம.கணேசராசா முன்னிலையில் கடந்த வாரம் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சந்தேக நபர்கள் சார்பாக சட்டத் தரணிகளான எஸ். செலஸ்ரீன், மற்றும் மு.றெமீடியஸ் ஆகியோர் ஆஜராகியிருந் தனர்.

சந்தேக நபர்கள் விளக்கமறியலில் இருந்த நேரம் பொலிஸார் சென்று கைதுக்கான காரணத்தைக் கூறாமல் அவர்களைக் கைது செய்து புதிய வழக்குகளைத் தாக்கல் செய்த நடவடிக்கையானது சட்டத்துக்கு முரணானது.

சந்தேக நபரைக் கைது செய்யும் பொழுது எதற்காகக் கைது செய்கிறோம் என்பது பொலிஸாருக்கு முதலில் தெரிந்திருக்க வேண்டும். கைது செய்து விட்டு கைதுக் கான காரணத்தைத் தேடுவது சட்டத்துக்கு முரணானதாகும் என்ற வாதத்தை முன்வைத்து சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு அடுத்தவாரம் மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவிருக்கிறது.
Read More | comments

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய நிர்வாகிகள் தெரிவு

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு நேற்று சனிக்கிழமை மாலை  கொழும்பில் நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக நடைபெற்ற இம் மாநாட்டில் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய தலைவராக ஆனந்த் பாலகிட்ணரும் புதிய செயலாளராக அ.நிக்ஸனும் தெரிவாகினர். பொருளாளராக எஸ்.ஸ்ரீகஜன் மீண்டும் தெரிவானார். 

இம்மாநாட்டில் 'விழுது' ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி சாந்தி சச்சிதானந்தம், இலங்கையின் சமகால ஊடகத்துறையின் நிலைவரம், ஊடகவியலாளர்கள் முன்னுள்ள கடமைகள், சவால்கள் , ஊடகக் கல்வியின் முக்கியத்துவம் என்பன தொடர்பாக உரை நிகழ்த்தினார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், இலங்கையில் ஊடகவியலாளர் களையும் ஊடக உரிமைகளையும் பாதுகாப்பதில் ஊடக அமைப்புகளின் பங்;களிப்புகள் குறித்து உரையாற்றினார். விசேட விருந்தினராக கலந்துகொண்ட மூத்த  ஊடகவியாளர் ந.வித்தியாதரன் வாழ்த்துரை நிகழ்த்துகையில் ஊடகவியாளர்கள் தமது தொழில்கௌரவத்தை பேண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். 

புலம்பெயர்ந்த ஊடகவியலாளரான ந.குருபரன் லண்டனிலிருந்து தொலைபேசி மூலம்  இம் மாநாட்டில் உரைநிகழ்த்துகையில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்துக்கு புலம் பெயர்ந்த ஊடகவியலாளர்களின் பங்களிப்பு குறித்து பேசினார்.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையுடன் இம்மாநாடு நடைபெற்றது.  இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணையத்தளத்தை இயக்குவதற்கும் ஒன்றியத்தினதும் ஊடகவியலாளர்களினதும் வளர்ச்சிக்கு பங்களிப்புகளை செய்ய விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் தயாராகவுள்ளதாகவும் இம்மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் விபரம் பின்வருமாறு:

தலைவர் : அனந்த பாலகிட்ணர்

செயலாளர் : அ.நிக்ஸன்

பொருளாளர் : எஸ்.ஸ்ரீகஜன்

பிரதி தலைவர் : கெனி ஜூட்சன்

உப தலைவர்கள் : ஏ.எல்.எம். சலீம், துஷியந்தினி கணகசபாபதிபிள்ளை

உப செயலாளர் : ஆர். சேதுராமன்

உப பொருளாளர் : எஸ்.ஜயந்திரன்

வடக்கு இணைப்பாளர் : ஏ.என்.எஸ். திருச்செல்வம்

கிழக்கு இணைப்பாளர்: எஸ். சரவணன்

மலையக இணைப்பாளர் : எம். செல்வராஜ்

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் : ஆர். பாரதி, எஸ்.சிவராஜா, ஏ.பி.மதன், ஆ.யதீந்திரா, விவியன், ஜீவா சதாசிவம், ஆர்.சிவராஜா, என். கபிலநாத், ஆர்.தயாபரன், சண்முகராஜா, எஸ்.தில்லைநாதன்.நன்றி : தமிழ்மிரர்
Read More | comments

இன்று முதல் மண்ணெண்ணெய் மானியம்

மண்ணெண்ணெய் மானிய திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூர்த்தி ஆணையாளர் நாயகம் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி 25 மாவட்டங்களைச் சேர்ந்த 330 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்தத் திட்டம் ஆரம்பிக் கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வசதிகளற்ற அனைத்து குடும்பங்களுக்கும் மாதாந் தம் 200 பெறுமதியான மண்ணெண்ணெய் மானி யத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதற்கமைய மலையக மக்கள் உள்ளிட்ட சுமார் 5 இலட்சம் பேருக்கு இந்த மானியம் கிடைக்கும் என தெரவிக்கப்படுகின்றது. மண்ணெண்ணெய் மானி யத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் மாதாந்தம் சுமார் 10 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை ஒதுக் கீடுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரி வித்துள்ளது.
Read More | comments

காலியில் விபத்து! 13 பேர் காயம்!

இன்று அதிகாலை காலி பிரதேசத்தில் விபத்தொன்று இடம்பெற்றதாக பொலி ஸார் கூறினர். வானொன்றும் முச்சக் கர வண்டியொயொன்றும் மோதுண்ட தாலே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் காலி கராப்பிட் டிய வைத்தியசாலையில் அனுமதிக் கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின் றது. காயமடைந்தவர்களில் 6 பெண்க ளும் சிறு குழந்தையொன்றும் அடங்கு வதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
Read More | comments

950 பேர் புனர்வாழ்வு முகாம்களில்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தின் 950 முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வு முகாம்களில் இருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக் கமைய அவர்கள் புனர்வாழ்வளிக்கப்படுப வர்கள் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்தார். இவர்களுள் 67 பெண்களும் அடங்குவதாக அவர் குறிப் பிட்டுள்ளார். வவுனியா, பூந்தோட்டம், மருதமடு, வெலி கந்த சேனபுர, ஆகிய புனர்வாழ்வு நிலையங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள் ளதாக அவர் மேலும் கூறினார்.
Read More | comments

அதிகம் பார்க்கப்பட்டவை

சர்வதேச செய்திகள்

international news