தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » ஈரானுடன் நல்லுறவைப் பேணுவது வருங்காலத்தில் இந்தியாவுக்கு சவாலாக அமையும்- சிஐஏ

ஈரானுடன் நல்லுறவைப் பேணுவது வருங்காலத்தில் இந்தியாவுக்கு சவாலாக அமையும்- சிஐஏ

Written By paadumeen on Monday, February 20, 2012 | 9:03 AM

டில்லியில் கடந்த திங்கட்கிழமை நடை பெற்ற கார்குண்டு சம்பவம் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை, அமெரிக்கப் புலனாய்வு அமைப் பான சிஐஏ இந்தியா வுக்குத் தெரிவித்துள்ள தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலியத் தூதரக அதிகாரி தால் எஹோசிவா பயணம் செய்த காரில் காந்த வெடிகுண்டு பொருத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தால் படுகாயமடைந்தார். இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத் தில் ஈரான் தீவிரவாத இயக் கத்துக்கு தொடர்பு இருப்பதாக இஸ்ரேலும், அமெரிக்காவும் குற்றம்சாட்டின.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏ தான் கண்டறிந்த புலனாய்வுத் தகவல்களை இந்தியப் புலனாய்வு அமைப் புகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகவல்களில் தாக்குதல் சம்பவத்தில் ஈரானுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்யும் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் ஈரானுடனான ராஜதந்திர உறவுகளைப் பேணும் விதமாக இந்தச் சம்பவம் குறித்து இந்தியா கருத்து ஏதும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்தபோதிலும் அமெரிக்கா அளித்தத் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து கருத்து கூற அவை மறுத்துவிட்டன.

சிஐஏயின் முன்னாள் உத்தியோகஸ்தரான லிசா கர்டிஸ் இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், இஸ்ரேலியத் தூதரக காரின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்திய-ஈரான் உறவில் ஓர் கரும் புள்ளியாக அமைந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். இந்தச் சம்பவத்தில் ஈரானின் பங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்நாட்டைக் கண்டிப்பது தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை என்றார்.

ஈரான் தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவது, கண்டனம் தெரிவிப்பது ஆகிய நடவடிக்கைகளில் இந்தியா மிதமான போக்கையே கடைப் பிடிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். தாக்குதல் சம்பவத்துக்குப் பின் ஈரானுடன் நல்லுறவைப் பேணுவது, அந்நாட்டின் அணு உலைத் திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடனான நெருடல்களைச் சமாளிப்பது ஆகியவை வருங் காலத்தில் இந்தியாவுக்கு சவாலாக அமையும் என்றும் கர்டிஸ் கூறினார்.

குண்டு வெடிப்பு குறித்து இந்தியப் புலனாய்வு அமைப்புகளின் முடிவுக்காகக் காத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரி யா நுலண்ட் தெரிவித்துள்ளார். மேலும் புலனாய்வு தகவல்கள் ஈரானைச் சுட்டிக் காட்டினால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஜு குற்றம்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது. ஈரானில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தீவிர வாதத்துக்கு எதிராக வலுவான, திட்டமிட்ட நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment