தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » மாலைதீவு அமைச்சரவை விரிவாக்கம்: முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கு வெளியுறவுத் துறை

மாலைதீவு அமைச்சரவை விரிவாக்கம்: முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கு வெளியுறவுத் துறை

Written By paadumeen on Monday, February 20, 2012 | 9:31 AM


மாலைதீவின் புதிய ஜனாதிபதி முகமது வாஹீத் தனது தலைமையிலான அமைச்சரவையை நேற்று விரிவாக்கம் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அதிபரான மெயுமூன் கயூமின் மகள் துன்யா மெயுமூனுக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதவி அளிக்கப் பட்டுள்ளது.

ஆனால் முக்கிய அமைச்சான வெளியுற வுத் துறைக்கு இன்னும் கபினட் அமைச்சர் நியமிக் கப்படவில்லை. இஸ்லாமிய விவகாரத் துறை அமைச்சராக ஷேக் முகமது ஷாகீம் அலி சயீத் தும், வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக முகமது மியூசும் நியமிக்கப்பட்டுள் ளனர்.

இதேவேளை பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத், விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார். இது போன்ற நிலையில் புதிய ஜனாதிபதி தனது தலைமையிலான அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாலை தீவில் புதிய அரசுக்கு எதிராக முகமது நஷீத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாட்டில் அசாதாரண சூழல் நிலவுகிறது. எந்த நேரத்தில் எது நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

இதனிடையே, மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில் கொமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாலேவில் புதிய ஜனாதிபதியை சனிக்கிழமை சந்தித்த அக்குழுவினர் விரிவான ஆலோ சனை நடத்தினர். இந்தச் சந்திப்பின் போது, மாலைதீவில் அரசியல் குழப்பம் ஏற்படு வதற்கான காரணம் என்ன என்பது குறித்தும், தற் போதைய சூழலுக்கு எவ்வாறு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கான காரணம் குறித்து கொமன் வெல்த் நாடுகள் அமைச்சர்கள் குழு நடத்தும் விசாரணைக்குத் தாம் முழு ஒத்துழை ப்புத் தருவதாக புதிய ஜனாதிப தி முகமது வாஹீத் உறுதி அளித்துள்ளதாகவும் ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment