Monday, February 13, 2012
இன்றைய தினம் போக்குவரத்தில் ஈடுபடும் தனி யார் பஸ்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பயணிகள் போக்குவரத்து சேவைகள் இடம்பெறா மல் இருப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப் பிட்டார். பணி பகிஷ்கரிப்பு தொடர்பில் தமக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலி ஸ் ஊடகப் பேச்சாளர், இதனால் பொலிஸாருக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாதென கூறினார். அத்துடன், பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நாடு முழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலி ஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டுகின்றார். அத்துடன், போக்கு வரத்தில் ஈடுபடும் அனைத்து பஸ்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.










