தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » நயன்தாரா பற்றி பேச விரும்பவில்லை - பிரபு தேவா பதில்

நயன்தாரா பற்றி பேச விரும்பவில்லை - பிரபு தேவா பதில்

Written By paadumeen on Monday, February 13, 2012 | 8:34 AM


ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்த பிரபு தேவா விடம் நயன்தாரா பற்றி கேள்வி எழுப் பினர் நிருபர்கள். 'அதைப் பற்றி பேச விரும்பவில்லை' என்று பதிலளித்தார் பிரபு தேவா.

பிரபல நடிகரும் டான்ஸ் மாஸ்டரு மான பிரபுதேவா நேற்று ஆந்திர மா நிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சிவ ன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு தே வஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக் கப் பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் ராகு-கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜையில் கலந் து கொண்டு சுமார் 1 மணி நேரம் பூஜை செய்தார். பின்னர் ஸ்ரீகாளஹஸ்தீஸ் வரர் மற்றும் ஞானபூங்கோதை அம் மையாரை தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்ததும் அவருக்கு கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் தீர்த்தப்பிரசாதங்கள் சாமிபடங்களை கோவில் நிர்வாகிகள் வழங்கினர். காலை 11.30 மணிக்கு கோவிலுக்கு வந்த அவர் பகல் 1 மணிக்கு கோவிலை விட்டு வெளியே வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில் "தற்போது இந்திப்படம் ஒன்றில் நடித்து வருகிறேன். ஹரவுடி ராத்தோடு' என்ற அந்த இந்திபடத்தில் நான் தான் கதாநாயகன். வருகிற ஜுன் மாதம் 15-ந் தேதி படம் வெளியாகிறது. ரசிகர்கள் இந்த படத்தை ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள்" என்றார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் உங்களுக்கும் நயன்தாராவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு 'நோ கமெண்ட்ஸ். தற்போது அதைப்பற்றி பேசவிரும்பவில்லை' என கூறி விட்டு வேகமாக சென்றார்.

பின்னர் அவர் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அருகே உள்ள முதியோர் ஆசிரமத்துக்கு சென்று அங்கிருந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

கடந்த ஆண்டு இதே கோயிலில் நயன்தாராவும் பிரபு தேவாவும் ஜோடியாக வந்து இந்த பூஜையை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment