தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கத் தீர்மானம்

மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கத் தீர்மானம்

Written By paadumeen on Monday, February 13, 2012 | 8:25 AM

மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரண ங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர் பில், நாளை நடைபெறவுள்ள கடற் றொழில் மாநாட்டில் மீனவப் பிரதிநிதி களுடன்கலந்துரையாடவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிடுகின் றது. எரிபொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரி நீர்கொழும்பு குடாபாடுவ பகுதியிலுள்ள மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நீர்கொழும்பு - கற்பிட்டியில் இருந்து மன்னார் வரை யான மீனவர்கள் கலந்துகொண்டனர். எரிபொருள் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து, மீனவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தை முடி வுக்கு கொண்டுவந்ததாக அரச வளங்கள் மற்றும் முயற்சியாண்மை அபி விருத்தி பிரதி அமைச்சர் சரத் குமார தெரிவித்தார். அமைச்சர் பசில் ராஜபக் ஸவின் ஆலோசனைக்கு அமைய, சம்பவ இடத்திற்கு சென்று மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன் னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப் பட்டதாக பிரதி அமைச்சர் குறிப்பிடுகின்றார். அத்துடன், இது தொடர்பான தீர்மானத்தை நாளைய தினம் அறிவிக்க முடியுமென அரச வளங்கள் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சரத் குமார மேலும் கூறினார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment