தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » மீண்டும் ஷம்பியனாகியது சென்னை ரைனோஸ்

மீண்டும் ஷம்பியனாகியது சென்னை ரைனோஸ்

Written By paadumeen on Monday, February 13, 2012 | 8:18 AM

இந்திய சினிமா நட்சத்திரங்கள் பங்கு கொள்ளும் சி.சி.எல் நட்சத்திர கிரிக் கெட் போட்டியில் தொடர்ச்சியாக இர ண் டாவது முறையாக தமிழ் சினிமா வை பிரதிநிதித்துவப்படுத்தும் சென் னை ரைனோஸ் ஷம்பியனாகி யுள்ள து. ஆறு அணிகள் பங்குபற்றியஇப்போ ட்டியின் இறுதிப் போட்டி சென்னை ரைனோஸ் - கர்னாடகா புல்டோசர்ஸ் அணிகளுக்கிடையில் ஹைதராபாத் ராஜவ் காந்தி சர்வதேச அரங்கில் நேற்றிரவு நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை ரைனோஸின் முதலாவது விக்கெட் ஓட்டமெதனையும் பெறாத நிலையில் வீழ்த்தப்பட்டது எனினும் தனித்து பேராடிய விக்ராந்த் ஆட்டமிழக்காமல் 95 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணிக்கு வலுச் சேர்த்தார். ஏனைய வீரர் கள் எவரும் பெரிதாக சோபிக்காத நிலையில் சென்னை ரைனோஸ் நிர்ண யிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை ப் பெற்றுக்கொண்டது. கர்னாடகா புல்டோசர்ஸ் அணியின் பந்துவீச்சில்  காரத்திக், துர்வா, பிரதீப்,மற்றும் அபிமன்யூ ஆகியோர் தலா ஒரு விக்கெட் டினை வீழ்த்தினர். 162 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கர்னாடகா புல்டோசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு  விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று 1 ஓட்டத்தினால் தோல் வியை தழுவியது. கர்னாடகா அணியின் துடுப்பாட்டத்தில் துர்வா 58 ஓட்டங்களயும் கார்த்திக் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.


சென்னை அணியின் பந்துவீச்சில் சிவா இரண்டு விக்ககெட்டுகளை வீழ் த்தினார். போட்டியின் நாயகனாக விக் ராந்த தெரிவானார். போட்டியை பொ றுத்தவரை கடந்த வருடம் இறுதிப் போட்டியில் சந்தித்த அதே அணி கள் இம்முறையும் களமிறங்கியமையும் கடந்த வருடம் ஷம்பியனாகிய சென் னை அணியே இமமுறையும் ஷம்பி யனாகியமையும் விசேட அம்சமாகும்.


0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment