தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க வேண்டுமாம்.

பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க வேண்டுமாம்.

Written By paadumeen on Monday, February 13, 2012 | 9:01 AM

அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைக்கு அமைய, பேக்கரி உற்பத்தி களின் விலைகளை அதிகரித்தல் கட் டாயமானது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறி ப்பிடுகின்றது. இந்த விடயம் தொடர் பில் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு கூடி, அடுத்த வாரமளவில் தீர்மான மொன்றை பெற்றுக்கொள்ள உள்ள தாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்த ன தெரிவித்துள்ளார்.டீசலின் விலை அதிகரிக்கப்பட்டமை பேக்கரி உற் பத்தியாளர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையிலுள்ள 75 வீதமான பேக்கரிகள் டீசல், மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயுவில் இயங்குபவை எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையா ளர்கள் சங்கத்தின் தலைவர் கூறினார். இதன் காரணமாக பேக்கரி உற் பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் கூட்டுறவு மற் றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேனவிடம் வினவிய போது, எதிர்காலத்தில் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment