தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » கிழக்கு மாகாணத்தில் விசேட கிராமிய அபிவிருத்தி- முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்

கிழக்கு மாகாணத்தில் விசேட கிராமிய அபிவிருத்தி- முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்

Written By paadumeen on Saturday, December 31, 2011 | 9:09 AM

பாதிக்கப்பட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்தல் என்ற விசேட கிராமிய அபிவிருத் திட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டிற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் இருந்து தலா இரண்டு கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அங்குள்ள மக்களுக்கான வாழ்வாதார வசதிகள்இ தொழில் வாய்ப்புக்கள், கல்வி, போக்குவரத்து, சுகாதாரவசதிகள், மின்சாரம், மற்றும் குடிநீர் வசதிகள் என்பன செய்து கொடுக்கப்படவுள்ளன.

அத்துடன் விசேட வாழ்வாதாரத் திட்டங்கள் மற்றும் சுயதொழில்களுக்கு உதவிகள் கனடிப்படையில் வழங்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விசேட கிராமிய அபிவிருத்திட்டத்தின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment