தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » தங்காலையில் பிரித்தானிய யுவதிஇ நீர்கொழும்பில் சுவீடன் யுவதி

தங்காலையில் பிரித்தானிய யுவதிஇ நீர்கொழும்பில் சுவீடன் யுவதி

Written By paadumeen on Saturday, December 31, 2011 | 9:52 AM



சுவீடன் நாட்டுப் பெண் ஒருவர் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பு பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.நீர் கொழும்பு கடற்கரை பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த இளைஞர்களே இவ்வாறு சுவீடன் நாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

15 முதல் 17 வயது வரையிலான ஐந்து இளைஞர்கள் கைது செய்யபப்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த இளைஞர்கள் மது போதையில் இருந்ததாகவும்இ பெண் சுற்றுலாப் பயணி அவர்களை கடந்து சென்றபோது இளைஞர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.பெண் சுற்றுலாப் பயணி சத்தமிட்டதனைக் கேட்ட பொலிஸார் இளைஞர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment