தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » வானை கடத்திச் சென்ற பெண் உட்பட ஆறு பேர் கைது: வவுனியாவில் சம்பவம்

வானை கடத்திச் சென்ற பெண் உட்பட ஆறு பேர் கைது: வவுனியாவில் சம்பவம்

Written By paadumeen on Tuesday, January 10, 2012 | 7:03 PM

கொழும்புக்கு செல்வதற்கு வாடகைக்கு வான் தேவையெனக் கூறி, வவுனியா வில் வானைக் கடத்ததியதாக தெரிவிக்கப்படும் பெண் உட்பட ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த மாதம் 23ஆம் திகதி குறித்த வான் சாரதியை அச்சுறுத்திவிட்டு வானை கடத்திச் சென்றதாக, வான் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட வவுனியா மாவட்ட விசேட குற்றவியல் தடுப்பு பொலிஸார், குறித்த வான் விற்பனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் இயக்கச்சி பகுதியில் நேற்று முன்தினம் அதனை மீட்டுள்ளனர்.

அத்துடன், வாகன கடத்தல்காரர்களிடமிருந்து கைக்குண்டு - 04, போலி பிஸ்டல் - 01, கைத்தொலைபேசி - 06, மோட்டார் சைக்கிள் - 02, முச்சக்கரவண்டி - 01 ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment