தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Showing posts with label Crime. Show all posts
Showing posts with label Crime. Show all posts

பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

Written By paadumeen on Saturday, February 18, 2012 | 12:04 PM

Saturday, February 18, 2012

அரசாங்கத்திற்கு சொந்தமான நெல் களஞ்சிய சாலையில் இருந்து சட்ட விரோதமாக நெல்லை விநியோகித்த சந்தேகத்தின் பேரில் எலஹெர பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். நெல் விநியோக சபைக்கு சொந்த மான களஞ்சியசாலையிலுள்ள நெல்லை தனியார் வர்த்தகர் ஒருவருக் கு குறித்த நபர் விநியோகித்துள்ளதாக பொலிஸார் கூறியுள் ளனர். நெல்லை விநியோகிப்பதற்காக பயன்டுத் தப்பட்ட லொறி ஒன்றையும் பொலிஸார் கைப் பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Read More | comments

வாகரையில் புதையல் தோண்டியோர் கைது!


வாகரை - மதுரன்கேணிகுளம் மற்றும் ஓவிலியா மடு ஆகிய கிராமங்களுக்கு இடையிலான பிரதே சத்தில் புதையல் தோண்டிய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நேற்றுமுன் தினம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட் டுள்ள சந்தேகநபர்களில் விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவரும் அடங்கு வதாக தெரிவிக் கப்படுகிறது.இதன்போது பூஜை பொருட்கள், புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக் கிள் ஒன் றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Read More | comments

நீர்கொழும்பில் ஒருவர் குத்திக் கொலை

Written By paadumeen on Thursday, February 16, 2012 | 2:24 PM

Thursday, February 16, 2012

நீர்கொழும்பு நகர மத்தியின் பிரதான வீதியி ல் உள்ள குதிரைப் பந்தய முகவர் நிலையம் ஒன்றில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியள வில் இந்த சம்பவம் இடம்பெற்றது.  நீர்கொழும்பைச் சேர்ந்த பேர்னாட் (வயது 55) என்பவரே கத்தியால் குத்திக் கொலை செய் யப்பட்டவர் ஆவார்.

குதிரைப் பந்தயம் தொடர்பில் நண்பர்கள் இருவருக்கு இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டதாகவும் பின்னர் அது கைகலப்பாக மாறிய நிலையில் ஒரு நண்பர் தனது நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் நீர் கொழும்பு பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் நீர்கொழும்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

(கே.என்.முனாஷா)
Read More | comments

போதைப்பொருள் கடத்திய பிலிபைன்ஸ் பெண் கைது

மில்லியன் ரூபா பெறுமதியுடைய கோகோயின் போதைப் பொருளை பிரேசிலில் இருந்து இலங்கை க்கு கடத்திவந்த பிலிபைன்ஸ் நாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.  கட்டுநாக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று காலை குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.
Read More | comments

இலங்கைப் பயணிகளுடன் சென்ற படகு அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டது!

Written By paadumeen on Wednesday, February 15, 2012 | 11:02 AM

Wednesday, February 15, 2012


இலங்கையில் மிகவும் உயிர் அச்சுறு த்தலுக்கு உள்ளான 64 பேர் இந்தோனே சியக் கடற்பரப்பினூடாக அவுஸ்திரே லியாவைச் சென்றடைந்திருப்பதாகத் தகவலொன்று தெரிவிக்கின்றது. ஒரு மணிநேரத்திற்கு முன்னர் இவர்களை அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் கைது செய்த அவுஸ்திரேலிய இமிகிரேசன் அதிகாரிகள் விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளதாக மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் 64 இலங் கைப் பயணிகளுடன் இந்தோனேசி யாவிலிருந்து பறப்பட்ட 45அடி நீளமான இடுகைப்படகே சற்றுமுன்னர் அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
Read More | comments

10 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - சந்தேக நபர் கைது


யாழ்ப்பாணம் அராலி, வசந்தபுரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி, அருகிலுள்ள வீட்டிற்கு இரவு வேளையில் நெருப்புப்பெட்டி வாங்குவதற்காகச் இச்சிறுமி சென்ற போதே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத் தப்பட்டுள்ளார். சந்தேக நபர் சிறுமி யின் வாயில் துணியைத் திணித்து விட்டு பாலியல் வல்லுறவு மேற் கொண்டதாகவும், மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியும் சந்தேக நபரும் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேக நபரை இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Read More | comments

போலி நோட்டுக்களுடன் பெங்களூரில் இலங்கைப் பிரஜை கைது


இந்திய நாணயப் பெறுமதியில் ஒரு இலட்சம் ரூபா போலி நோட்டுக் களுடன், பெங்களூரில் இலங்கைப் பிரஜையொருவர் கைதுசெய்யப் பட்டுள்ளார். போலி நாணய வியா பாரம் தொடர்பாக இலங்கைப் பிரஜை ஒருவர் கைதான முதலாவது சந்தர்ப் பம் இதுவாகும் என இந்தியப் பொலி ஸார் குறிப்பிடுகின்றனர். இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்களைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்தியப் பொலி ஸார் தெரிவிக்கின்றனர். இந்த போலி நாணயத் தாள்களை அச்சிட்டவர்களைக் கண்டறிவதே விசாரணைகளின் நோக்கமாக அமைந்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜை யின் கடவுச்சீட்டை இந்திய பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக வும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read More | comments

நீர்வேலியில் திருடுபோகும் பழைய இரும்பு, பித்தளைப் பொருட்கள்!

Written By paadumeen on Tuesday, February 14, 2012 | 12:05 PM

Tuesday, February 14, 2012


பழைய இரும்பு மற்றும் பித்தளைப் பொருட்களைக் களவாடும் திருடர் களின் தொல்லை நீர்வேலிப் பகுதி யில் அதிகரித்துவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பொது இடங்கள் மற்றும் குடிமனைப் பகுதி களில் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் தினமும் இடம்பெற்று வருகின்றன. என்று மக்கள் குறைப்படுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் லான்மாஸ்டர் ஒன்றில் பழைய இரும்புகளை எற்றி வந்த கும்பல் ஒன்று இப்பகுதியில் உள்ள வீட்டு முற்றத்தில் இருந்த பெரிய பித்தளைக் கிடாரமொன்றை களவாடுவதற்கு எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
‘ஆள் நடமாட்டத்தைக் கண்டு சந்தேகப்பட்டு “என்ன வேணும்” எனக் கேட்ட தும் திருடர்கள் லான் மாஸ்டருடன் தப்பி ஓடிவிட்டார்கள்” என்று வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
மேலும் அப்பிரதேசத்திலுள்ள ஆலயயமொன்றிலும் கடந்த வாரம் திருடர்கள் கைவரிசையைக் காட்டிச் சென்றிருக்கிறார்கள். அங்கிருந்த பித்தளையிலான தெய்வ விக்கிரகங்கள் இரண்டை உடைத்து எடுத்துச் சென்றிருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது இப்பிரதேசத்திலுள்ள பிரபலமான கராஜ் ஒன்றினுள் உட்புகுந்த திருடர்கள் இங்கிருந்த இரும்புப் பொருட்களையும் அள்ளிச்சென் றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றத. இச்சம்பவம் தொடர்பாக நீர்வேலி பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லையென பிரதேசவாசிக ள் விசனம் தெரிவிக்கின்றனர்.
Read More | comments

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

Written By paadumeen on Monday, February 13, 2012 | 6:08 PM

Monday, February 13, 2012

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை சிவன் கோயி லுக்கு பின்னால் தூக்கில் தொங்கிய நிலையில்55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இன்று காலை(13.02.2012)சடலத்தை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலத்தில் அடிகாயங்கள் காணப் படுவதால் சடலமாக மீட்கப்பட்ட குறித்த நபர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப் பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிக்குடி மரண விசாரணை அதிகாரி சடலத்தின் மீதான மரண விசாரணையை மேற்கொண்டதாகவும் இச்சம்ப வம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பட்டிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More | comments

வெலிக்கடை சிறைக்கைதி கடத்தல்


வெலிக்கடைசிறைச்சாலையிலிருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட கைதி ஒருவர், நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து இனந்தெரியாத ஆயுத குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். களனி, பட்டிய ஹந்திய பகுதியைச் சேர்ந்த 52 வயதான நபர் ஒருவரே இவ்வாறு இன்று பகல் 1.15 அளவில் கடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Read More | comments

வசமாக அகப்பட்ட பகல் கொள்ளையர்

Written By paadumeen on Sunday, February 12, 2012 | 7:15 PM

Sunday, February 12, 2012


மட்டக்களப்பில் அண்மைக்காலமாக பகல் வேளை களில் வீடுகளை உடைத்து கொள்ளையிடும் சம்ப வம் இடம்பெற்று வந்த நிலையில் பொலிஸாரின் மோப்பநாய் ஊடாக கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையின் போது இரண்டு கொள்ளையர்கள் மட்டக்களப்பு கைது செய்யப்பட்டதுடன் இவர்களி டம் இருந்து நகை பணம் உட்பட பல்வேறு பொருட் கள் மீட்கப்பட்டுள்ளன. 

மட்டக்களப்பில் பல பகல் கொள்ளைகள் இடம் பெற்ற நிலையில் மட்டக்களப்பு பூம்புகார் பகுதி யில் இடம்பெற்ற பகல் கொள்ளையினைத் தொடர் ந்தே மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தலைமை யக பொறுப்பதிகாரி டி.எம்.என்.வி.தசாநயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சிறுகுற்றப் புலன் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ரி.சாந்தகுமார் தலைமையிலான குழு விசாரணைகளை மேற்கொண்டது. 

இந்நிலையில் கடந்த 7ம் திகதி பூம்பூகார் வீதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் இருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது வீட்டு யன்னல்களை திறப்பதற்கு பயன்படுத்தப்படும் குறடு ஸ்கூட்ரைவர் போன்றவை இவர்களி டம் காணப்பட்டதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைக்குட்படுத்தப்படுத்தி குறித்த இருவரும் தாம் இக்கொள்ளைகளில் ஈடுபட்டதை ஒப்புக் கொண் டுள்ளனர். 

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையினூடாக மட்டக்களப்பு நகர் பகுதியல் ஏழு வீடுகளையும் கல்லடியில் நாலுவீடுகளையும் பகல் வேளையில் யன்னல்களினூடாக திறந்து கொள்ளையிட்டமையும் ஒப்புக்கொண்டுள்ள துடன் கொள்ளையிட்ட பொருட்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

ஆரயம்பதி இல:37 மதுராபுரம் பகுதியை சேர்ந்த கந்தையா சந்திரகுமார் அல்லது குமார் (25) 1ம் வட்டாரம் மண்முனை ஆரயம்பதியை சேர்ந்த கிரு ஸ்ணபிள்ளை உதயச்சந்திரன் (32) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளனர். 

இவர்களிடம் இருந்து பணம், தங்க நகைகள், மற்றும் இமிற்றேசன் நகைகள், மின்சாதனப் பொருட்கள், கையடக்க தொலைபேசிகள், கமராக்கள், உடுப்பு, வெண்கல பாத்திரங்கள், அலுமினியப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட் கப்பட்டுள்ளன. 

இவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி திரு.கருணா கரன் முன்னிலையில் கடந்த 8ம் திகதி ஆஜர்படுத்திய போது எதிர் வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டுள்ளார். தொடர்ந் தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
Read More | comments

குச்சவெளியில் இந்திய பிரஜை கைது

சுற்றுலா விசாவில் இலங்கை வந்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குச்சவெளி பகுதியில் வைத்து நேற்று (11) கைது செய்யப்பட்டதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
 சந்தேகநபர் இன்று (12) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
Read More | comments

கஹவத்தை கொலைச் சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம்


இரத்தினபுரி - கஹவத்தை பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் நூற்றிற்கும் அதிகமானோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுக்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். பொலிஸ் விசேட அதிரடி படை மற்றும் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு, பிரதேசத்தின் பாதுகாப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கஹவத்தை ஓபாத்த பகுதியில் கடந்த சில தினங்களுக்கு தாயும், மகளும் கொலை செய் யப் பட்டிருந்ததுடன், அவர்களின் சடலங்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More | comments

சவூதியில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்! குற்றவாளி தலை துண்டிப்பு

Written By paadumeen on Friday, February 3, 2012 | 2:10 PM

Friday, February 3, 2012

சவூதியில், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக் கில் ஒருவருக்கு தலையை துண்டித்து தண்டனை வழங்கப்பட்டது. சவூதியில், பாலியல் பலாத்காரம், போதை மருந்து கடத்துதல், கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களுக்கு ஷகாரிய சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் சமி-அல்-மெகலாஃபி என்பவர், அவரது உறவினரான இளம் பெண்ணை , பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.
இக்குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டு, தண்டனை நிறைவேற்றப் பட்டது. அதன்படி மெதீனா நகரில் உள்ள தண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டு மூன்று பேர் கொண்டவர்கள் , அவரது தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றினர். இவ்வாறு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சவூதியில் கொடிய குற்றங்களுக்காக கடந்த ஒரு ஆண்டுகளில் 76 பேருக்கு கொடூர தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும்,ஐ.நா. மனித உரிமை அமைப்பு, இது போன்ற தண்டனைகளை கைவிடும்படி ஏற்கனவே வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Read More | comments

அதிகம் பார்க்கப்பட்டவை

சர்வதேச செய்திகள்

international news