
இரத்தினபுரி - கஹவத்தை பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் நூற்றிற்கும் அதிகமானோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுக்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். பொலிஸ் விசேட அதிரடி படை மற்றும் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு, பிரதேசத்தின் பாதுகாப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கஹவத்தை ஓபாத்த பகுதியில் கடந்த சில தினங்களுக்கு தாயும், மகளும் கொலை செய் யப் பட்டிருந்ததுடன், அவர்களின் சடலங்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment