
2011ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் இரண்டு பிரதே சங்களில் பதிவு செய்யப்பட்ட 150,000 த்திற்கும் அதிகமான வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்ற து. இதன்படி, கொழும்பு மாவட்டத் தி லுள்ள அதிகமானோர் இரண்டு பிரதே சங்களில் தம்மை பதிவு செய்து கொ ண்டுள்ளதாக மேலதிக தேர்தல்க ள் ஆணையாளர்ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக் க குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் சுமார் 62,000 திற்கும் அதிகமானோர் தம்மை பதிவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்கா ட்டியுள்ளார். ஒரு பிரதேசத்தில் மாத்திரம் தம்மை பதிவு செய்யுமாறு இவர்களுக்கு கடிதம் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக அவர்களுக்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார். இந்த காலப் பகுதிக்குள் தம்மை உரியவாறு பதிவு செய்ய தவறும் நபர்களின் பெயர்களை ஏதேனும் ஒரு பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப் பிட்டார்.
0 comments:
Post a Comment