தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » நவீனரக அறுவடை இயந்திரங்களை இயக்க சாரதிகள் இல்லை! மட்டக்களப்பு விவசாயிகள் கவலை.

நவீனரக அறுவடை இயந்திரங்களை இயக்க சாரதிகள் இல்லை! மட்டக்களப்பு விவசாயிகள் கவலை.

Written By paadumeen on Sunday, February 12, 2012 | 9:13 AM

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேளா ண்மை அறுவடைக்குரிய நவீன ரக இயந்திரத்தைச் செலுத்தவதற்கு பயிற் சி அனுபவமற்ற சாரதிகள் போதியளவு இல்லாத காரணத்தினால் தாம் இந்தி யாவிலிருந்து சாரதிகளை வரவழைக் கவேண்டிய நிலை எற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்ற னர். விவசாய செய்கைக்காக பயன்படு த்தப்படும் நவீன ரக இயந்திரங்களை செலுத்துவதற்கு சாரதிகள் உள்ளுரில் இருந்தாலும் அவர்களுக்கு பயிற்சியும் தொழில்நுட்ப அனுபவமும் போதியள வு இல்லாத காரணத்தினாலே இந்தி யாவிலிருந்து சாரதிகளைத் தாம் வர வழைக்க வேண்டியிருப்பதாக விவசாயிகளும் இயந்திர உரிமையாளர்களும் தெரிவிக்கின்றனர்.
இந்திய சாரதிகள் முகவர்களுடாக அழைத்து வரப்பட்டாலும் சுற்றுலாப் பய ணிகள் விசாவில் நாட்டிற்குள் நுழைவதால் சட்ட ரீதியான பிரச்சனைக்கு இப்போது முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் 6 பேர் மட்டக்களப்பு பட்டிப்பளை  பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப் பட்டு நிதிமன்ற உத்தரவின் பெயரில் குற்றப்பணம் அறவிடப்பட்டு எச்சரிக்கை யுடன் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியாவிலிருந்து இலங்கை வரும் இத்தகைய சாரதிகள் சுற்றுலாப் பயணி க ள் விசாவில் வராமல் வேலை அனுமதிப்பத்திரம் பெற்று வந்தால் சட்டரீதி யான பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையென் று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment