தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » இரும்புக் கடத்தலை முறியடித்த உயர் அதிகாரிக்கு கிடைத்த வெகுமதி! கொழும்புக்கு இடமாற்றம்.

இரும்புக் கடத்தலை முறியடித்த உயர் அதிகாரிக்கு கிடைத்த வெகுமதி! கொழும்புக்கு இடமாற்றம்.

Written By paadumeen on Sunday, February 5, 2012 | 11:35 AM

காங்கேசன்துறை சிமெந்து ஆலையின் இயந்திரங்கள் பழைய இரும்புக்கு விற் பனை செய்வது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்து அதனைத் தடுக்க முற்பட்ட சிமெந்து ஆலையின் உயர் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பழிவாங்கும் நோக் குடனேயே இந்த இடமாற்றம் இடம் பெற் றிருக்கலாம் என்று காங்கேசன்துறை சிமெந்து ஆலையின் ஊழியர்கள் தெரிவி த்தனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலுள்ள காங்கேசன்துறை சிமெந்து தொழிற் சாலையின் மிகப்பெறுமதி வாய்ந்த இயந்திரங்கள் கடந்த வருடம் நடுப்பகுதியிலிருந்து வெட்டப்பட்டு பழைய இரும்புக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன. அடிக்கடி லொறிகளில் இவை ஏற்றப்பட்டு தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டன. அந்த அக்கிரமச் செயல் குறித்து காங்கேசன்துறை சிமெந்து ஆலைக்குப் பொறுப்பாக இருந்த உயரதிகாரி தனது தலைமைப் பீடத்துக்கு அறிவித்தும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இறுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் குறித்த உயரதிகாரி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதையடுத்து இரும்புக் கடத்தல் இந்த வருடம் ஜனவரி முதல் வாரத்தில் முறியடிக்கப்பட்டது. கடத்தல் முறியடிக் கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருந்த பொலிஸில் முறைப்பாடு செய்து முறியடிப்புக்கு உதவிய காங்கேசன்துறை சிமெந்து ஆலை யின் உயரதிகாரி கடந்த 20ஆம் திகதியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள் ளார்.
இதேவேளை, இரும்புக் கடத்தல் நடவடிக்கைகளுக்கும் அவற்றை தென்னிலங்கைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்ட நீர்கொழும்பு வியாபாரிக்கும் சிமெந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைமைக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment