
இந்திய நாணயப் பெறுமதியில் ஒரு இலட்சம் ரூபா போலி நோட்டுக் களுடன், பெங்களூரில் இலங்கைப் பிரஜையொருவர் கைதுசெய்யப் பட்டுள்ளார். போலி நாணய வியா பாரம் தொடர்பாக இலங்கைப் பிரஜை ஒருவர் கைதான முதலாவது சந்தர்ப் பம் இதுவாகும் என இந்தியப் பொலி ஸார் குறிப்பிடுகின்றனர். இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்களைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்தியப் பொலி ஸார் தெரிவிக்கின்றனர். இந்த போலி நாணயத் தாள்களை அச்சிட்டவர்களைக் கண்டறிவதே விசாரணைகளின் நோக்கமாக அமைந்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜை யின் கடவுச்சீட்டை இந்திய பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக வும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment