தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » மின்சாரசபை பொறியியலாளர்கள் பகிஸ்கரிப்பில்! மின்சாரக் கட்டணம் அதிகரிக்கலாம்.

மின்சாரசபை பொறியியலாளர்கள் பகிஸ்கரிப்பில்! மின்சாரக் கட்டணம் அதிகரிக்கலாம்.

Written By paadumeen on Wednesday, February 15, 2012 | 10:15 AM


இலங்கை மின்சார சபையின் பொறியிய லாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளனர். தனிப்பட்ட விடு முறையில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதாக மின்சார சபை பொறியிய லாளர்கள் சங்கத்தின் தலைவர் நந்தித பத்திரண குறிப்பிட்டார். அங்கீகரிக்கப் பட்ட சம்பள மீளாய்வினை வழங்கா மைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே தொழிற் சங்க நடவடிக்கையை முன்னெடுத் துள்ளதாக அவர் கூறினார். இன்றைய தினம் பொதுச் சபை கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொது பாவனைகள் ஆணைக்குழு தமது இறுதி தீர்மானத்தை இன்றைய தினம் வெளியிடவுள்ளதாக தெரியவருகிறது.  பெரும்பாலும் இன்றைய தினம் முதல் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய 18 ரூபா செல வாவதாக, மின்சார மற்றும் சக்தி வள அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் மின்சார பாவனையாளர்களிடம் இருந்து ஒரு அலகுக்கு 13 ரூபா மாத்திரமே அரவிடப்படுகிறது. இந்த நிலையில் எரிபொருள் விலை ஏற்றம் மேலும் மின்சார சபையை நட்டத்தில் ஆழ்த்தியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment