தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய நிர்வாகிகள் தெரிவு

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய நிர்வாகிகள் தெரிவு

Written By paadumeen on Sunday, February 19, 2012 | 2:21 PM

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு நேற்று சனிக்கிழமை மாலை  கொழும்பில் நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக நடைபெற்ற இம் மாநாட்டில் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய தலைவராக ஆனந்த் பாலகிட்ணரும் புதிய செயலாளராக அ.நிக்ஸனும் தெரிவாகினர். பொருளாளராக எஸ்.ஸ்ரீகஜன் மீண்டும் தெரிவானார். 

இம்மாநாட்டில் 'விழுது' ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி சாந்தி சச்சிதானந்தம், இலங்கையின் சமகால ஊடகத்துறையின் நிலைவரம், ஊடகவியலாளர்கள் முன்னுள்ள கடமைகள், சவால்கள் , ஊடகக் கல்வியின் முக்கியத்துவம் என்பன தொடர்பாக உரை நிகழ்த்தினார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், இலங்கையில் ஊடகவியலாளர் களையும் ஊடக உரிமைகளையும் பாதுகாப்பதில் ஊடக அமைப்புகளின் பங்;களிப்புகள் குறித்து உரையாற்றினார். விசேட விருந்தினராக கலந்துகொண்ட மூத்த  ஊடகவியாளர் ந.வித்தியாதரன் வாழ்த்துரை நிகழ்த்துகையில் ஊடகவியாளர்கள் தமது தொழில்கௌரவத்தை பேண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். 

புலம்பெயர்ந்த ஊடகவியலாளரான ந.குருபரன் லண்டனிலிருந்து தொலைபேசி மூலம்  இம் மாநாட்டில் உரைநிகழ்த்துகையில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்துக்கு புலம் பெயர்ந்த ஊடகவியலாளர்களின் பங்களிப்பு குறித்து பேசினார்.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையுடன் இம்மாநாடு நடைபெற்றது.  இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணையத்தளத்தை இயக்குவதற்கும் ஒன்றியத்தினதும் ஊடகவியலாளர்களினதும் வளர்ச்சிக்கு பங்களிப்புகளை செய்ய விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் தயாராகவுள்ளதாகவும் இம்மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.





இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் விபரம் பின்வருமாறு:

தலைவர் : அனந்த பாலகிட்ணர்

செயலாளர் : அ.நிக்ஸன்

பொருளாளர் : எஸ்.ஸ்ரீகஜன்

பிரதி தலைவர் : கெனி ஜூட்சன்

உப தலைவர்கள் : ஏ.எல்.எம். சலீம், துஷியந்தினி கணகசபாபதிபிள்ளை

உப செயலாளர் : ஆர். சேதுராமன்

உப பொருளாளர் : எஸ்.ஜயந்திரன்

வடக்கு இணைப்பாளர் : ஏ.என்.எஸ். திருச்செல்வம்

கிழக்கு இணைப்பாளர்: எஸ். சரவணன்

மலையக இணைப்பாளர் : எம். செல்வராஜ்

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் : ஆர். பாரதி, எஸ்.சிவராஜா, ஏ.பி.மதன், ஆ.யதீந்திரா, விவியன், ஜீவா சதாசிவம், ஆர்.சிவராஜா, என். கபிலநாத், ஆர்.தயாபரன், சண்முகராஜா, எஸ்.தில்லைநாதன்.











நன்றி : தமிழ்மிரர்

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment