
ஒருவரைக் கைது செய்துவிட்டு வேறு காரணங் களைப் பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய சம்பவமொன்று அண்மை யில் குடாநாட்டில் இடம்பெற்றுள்ளது. பொருட்களைத்திருடிய குற்றச்சாட்டில் யாழ் நகர் மற்றும் நாவாந்துறை யைச் சேர்ந்த. இருவருக்கு எதிராக கோப்பாய் பொலிஸாரால் வழக்குப் பதிவு செய்யப் பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.
சந்தேக நபர்களில் ஒருவர் பிறிதொரு குற்றச்சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச் சாட்டில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ் சிறைச்சாலை யில் விளக்கமறியலில் வைக்கப்படார். சிறைச்சாலைக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார் அந்தச் சந்தேக நபரிடம் சட்ட த்துக்கு முரணான வகையில் மிரட்டி கையெழுத்துப் பெற்றுள்ளனர். அதாவது வாக்குமூலம் பெறுவதாகக் கூறி உள்ளே சென்ற அவர்கள் சிங்களத்தில் குற்ற முறைப்பாடு ஒன்றை எழுதி சந்தேக நபர் களுக்குப் புரியாத வகையில் வாக்கு மூலத்தைப் பதிந்து விட்டு அதில் சந்தேக நபர் களிடமிருந்து கையொப்பமும் பெற்றுள்ளனர்.
அதில் சந்தேக நபர்கள் சம்மந்தப்பட்டிராத மேலும் நான்கு வழக்குகளை கொள்ளை வழக்குகளுடன் சம்மந்தப்பட்டவர்கள் எனத் தெரிவித்து வழக்குப் பதிவு செய்துள் ளதாக சட்டத்தரணி செலஸ்ரீன் மன்றில் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து திருட்டு சம்பந்தமான வழக்கு விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தவழக்கு யாழ் நீதிமன்றில் நீதிவான் ம.கணேசராசா முன்னிலையில் கடந்த வாரம் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சந்தேக நபர்கள் சார்பாக சட்டத் தரணிகளான எஸ். செலஸ்ரீன், மற்றும் மு.றெமீடியஸ் ஆகியோர் ஆஜராகியிருந் தனர்.
சந்தேக நபர்கள் விளக்கமறியலில் இருந்த நேரம் பொலிஸார் சென்று கைதுக்கான காரணத்தைக் கூறாமல் அவர்களைக் கைது செய்து புதிய வழக்குகளைத் தாக்கல் செய்த நடவடிக்கையானது சட்டத்துக்கு முரணானது.
சந்தேக நபரைக் கைது செய்யும் பொழுது எதற்காகக் கைது செய்கிறோம் என்பது பொலிஸாருக்கு முதலில் தெரிந்திருக்க வேண்டும். கைது செய்து விட்டு கைதுக் கான காரணத்தைத் தேடுவது சட்டத்துக்கு முரணானதாகும் என்ற வாதத்தை முன்வைத்து சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு அடுத்தவாரம் மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவிருக்கிறது.
0 comments:
Post a Comment