
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் குறுகிய, சுய நல, சந்தர்ப்பவாத அரசியல் பச்சோந்தித்தனத்தால் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார் வன்னியில் யுத்த கால விதவைகளில் ஒருவராக உள்ள பிரபாகரன் கலாரஞ்சினி என்கிற பெண்.
பிரபாகரன் - கலாரஞ்சினி தம்பதிகளின் மகன் தமிழன்பனுக்கு பிறவிச் செவிடு. வாய் பேச மாட்டார். வைத்தியர்கள் கை விட்டு விட்டனர்.
புலம்பெயர் தமிழர் பணத்தில் அரசியல் நடத்திஇ சகோதரன் நடத்தும் இணையத் தளம் மூலம் விளம்பரம் தேடி வரும் சிறிதரன் எம்.பி இப்பெண்ணை வரவழைத்து இருக்கின்றார்.
பசப்பு வார்த்தைகள் பேசி இருக்கின்றார். தமிழன்பனின் வருத்தத்தை குணப்படுத்தித் தர முடியும் என்று பொய்யான வாக்குறுதி வழங்கி இருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்தவர் என்று அண்டப் புளுகு ஒன்றை அவிழ்த்து விட்டிருக்கின்றார். கலாரஞ்சினி இவரின் கபட நாடகத்தை அறிந்து இருக்கவில்லை. மிகவும் இரகசியமான விடயங்களை இவருடன் பகிர்ந்து கொண்டார். ஆனால் இப்பெண்ணின் முன் அனுமதியையோஇ சம்மதத்தையோ பெறாமல் சிறிதரன் எம்.பி கள்ளத்தனமான இச்சம்பாசணையை வீடியோ பதிவு செய்து கொண்டார். சகோதரனின் இணைய
த் தளத்தில் இவ்வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். செய்தி பிரசுரித்து இருக்கின்றார்.

தமிழன்பனுக்கு பண உதவி செய்ய வேண்டும் என்று கோரி உள்ளார்.
ஆனால் இவ்வீடியோ வெளிவந்தமையை அடுத்து பெண்ணுக்கும்இ வீட்டாருக்கும்
பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளன.
எம்.பியின் கபடத்தனத்தை ஊடகங்களுக்கு இப்பெண் வெளிப்படுத்தியமையை அடுத்து எம்.பியின் கூலிப் படையினரால் படுகொலை அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு உள்ளன. உ
தவி வேண்டாம், செய்தியை நீக்கி விடுங்கள் என்று எழுத்துமூலம் பெண் கோரி உள்ளார். ஆனால் அதற்கு சிறிதரனின் வரட்டுக் கௌரவம் இடம் கொடுக்க மறுக்கின்றது. இந்நிலையில் தற்கொலை செய்து கொள்ளப் போகின்றார் என்று ஸ்ரீதரனுக்கும்இ ஊடகங்களு
க்கும் அறிவித்து உள்ளார் இப்பெண்.
உதவி வேண்டாம் என்று சொல்லுபவருக்காக ஸ்ரீதரன் புலம்பெயர் தமிழரிடம் இருந்து தொடர்ந்தும் நிதி பெற்று வருகின்றமை அப்பட்டமான மோசடியே ஆகும்.
0 comments:
Post a Comment