தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » இராமேஸ்வரம் - தலைமன்னார் படகு சேவை! அதிகாரிகள் நேரில் சென்று ஆராய்வு

இராமேஸ்வரம் - தலைமன்னார் படகு சேவை! அதிகாரிகள் நேரில் சென்று ஆராய்வு

Written By paadumeen on Sunday, February 12, 2012 | 7:19 PM

இராமேஸ்வரம் - தலைமன்னாருக்கு இடையிலான படகு சேவையை மீள ஆரம்பிப்பது குறித்து அதிகாரிகள் சில ர் அரிச்சல் முணை பகுதிக்குச் சென்று ஆராய்ந்துள்ளனர். 

1980களில் இலங்கையில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இராமேஸ்வரம்,தலைமன்னாருக்கு இடையேயான படகுசேவை இடை 
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இச்சேவையை மீள ஆரம்பிக்கவென தூத்துக்குடி துறைமுகத் தலைவர் சு ப் பையா கப்பல் போக்குவரத்து செயலா ளர் கே.மோகனதாஸ் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் இராமேஸ்வரம் அரி ச்சல்முணை சென்று ஆராய்ந்துள்ளனர். 

இந்த படகு சேவையை மீள ஆரம்பிப்பதன் பொருட்டு இராமேஸ்வரம் துறை முகத்தில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. 

இதேவேளைஇ கொழும்பு - தூத்துக்குடி கப்பல் சேவை கடந்த வருடம் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பொருளாதார சட்ட சிக்கல்கள் காரண மாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment