மட்டக்களப்பு,பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இன்று காலையில் இடம்பெற்ற கிளேமோர் குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கும் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்குமிடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் ஒன்றிலேயே இந்தக் கிளேமோர் குண்டு பொருத்தப்பட்டிருந்ததாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் சார்ஜன்ட் பிரியந்த (வயது 39), சிவிலியனான கணபதிப்பிள்ளை வள்ளிபுரம் (வயது 58) ஆகியோரே இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களாவர்.
காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 பேரில் மூவரின் நிலை கவலைக்கிடமாகவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்துக்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி வி.ராமகலன் மரண விசாரணையை மேற்கொண்டார்.
இதேவேளை, இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிரதேசத்தினூடான போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் அமைந்திருந்த சுமார் 150 கடைகள் மூடப்பட்டுள்ளன.
துற்பொழுது இந்தப் பிரதேசத்தில் ,பெருமளவான இராணுவத்தினரும் பொலிசாரும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.



0 comments:
Post a Comment