
அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் முகாமிற்கு வழங்கல் பணியில் ஈடுபட்டிருந்த வாகனம் ஒன்றின் மீது நேற்று (19-01-2009) மாலை 04-40 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 04 விசேட அதிரடிப்படையினர் உடல் சிதறி பலியாகியதுடன் அவர்கள் பயணித்த வாகனமும் பலத்த சேதமடைந் துள்ளதாக அம்பாறை மாவட்ட விடுதலை புலிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அம்பாறை மாவட்டத்தில் இவ்வருடம் துவங்கியது முதல் நடைபெற்ற இரு வேறு தாக்குதலில் சம்பவங்களில் 08 விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதோடு 05விசேட அதிரடிப்படையினர் படுகாயமடைந்துள்ளடன் ஒரு பொலிஸாரும் ஒரு ஊர்காவல் படையினரும் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒரு பொலிஸார் படுகாயமடைந்தும் உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 

 


0 comments:
Post a Comment