

 நேற்று இரவு 10 மணியளவில் கொழும் பில் தமிழீழ விடுதலை புலிகளின் இரு விமானங்கள் தாக்குதல்களை நடத்தி யுள்ளன. இதன் போது கொழும்பு கொம்ப னித்தெருவில் அமைந்துள்ள விமானப் படைத் தலமையகம் முன்பாக உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டிடம் சேதத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று இரவு 10 மணியளவில் கொழும் பில் தமிழீழ விடுதலை புலிகளின் இரு விமானங்கள் தாக்குதல்களை நடத்தி யுள்ளன. இதன் போது கொழும்பு கொம்ப னித்தெருவில் அமைந்துள்ள விமானப் படைத் தலமையகம் முன்பாக உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள கட்டிடம் சேதத்துக்குள்ளாகியுள்ளது.இச்சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டவர்களில் கவலைக்கிடமாக இருந்த 2 பேர் பலியாகியதாகவும் 5 விமானப்படையினர் உட்பட 47 காயமடைந்ததாகவும் அதில் மேலும் சிலரின் நிலை இன்னமும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தளம் கற்பிட்டியூடாக புலிகளின் 2 விமானங்கள் சுமார் இரவு 9.15 மணியள வில் வருவது அவதானிக்கப்பட்டதுடன் உடனடியாகவே கொழும்பு நகரில் வானூர்தி எதிர்ப்பு பொறிமுறையைச் செயற்படுத்திய படையினர் கொழும்பு நகரில் முழுமையாக மின்சாரத் தடையை ஏற்படுத்தினர்.
வானை நோக்கி வெளிச்சம் பாய்ச்சப்பட்ட அதேவேளையில் வானூர்தி எதிர்ப் புத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வானை நோக்கி கடுமையான துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்பட்டது. இதனால் கொழும்பு நகர் இரவு சுமார் 9:20 முதல் சுமார் ஒரு மணி நேரத்துக்குத் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களால் அதிர்ந்து கொண்டிருந்தது. இதனால் கொழும்பில் பெரும் பதற்றம் காணப்பட் டது.
தாக்குதல் நடாத்திவிட்டுச் சென்ற புலிகளின் விமானங்களிலொன்று கட்டுநாயக்கா பிரதேசத்தில் வைத்து சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாகவும் புலிகளின் மற்றைய விமானம் விரைவாக தப்பிச்சென்றதாகவும் படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சுட்டுவீழ்த்தப்பட்டுள்ள புலிகளின் விமானத்தின் ஒரு பகுதி யை இங்கு காணலாம்.
எனினும் இத்தாக்குதலில் பெருமளவான சேதங்கள் விமானப் படை தலமை யகத்துக்கும் ஏற்பட்டிருக்கக்கூடுமென தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை விடுதலைப்புலிகள் முதன் முறையாக தமது விமானமொன்றையும் வானோடி ஒருவரையும் இழந்துள்ளமை மனவருத்தத்திற்குரியதொன்றாக கருதப்படுகின்றது.
 

 


0 comments:
Post a Comment