

தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு காரணமான வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் நேற்று விடுதலைப்புலிகளின் கரும்புலிகளால் தாக்கப்பட்டது. இதில் ஏற்பட்டுள்ள பெரும் சேதவிபரங்களை அரசாங்கம் மூடிமறைத்துவிட்டது.இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய இருவரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். விடுதலைப்புலிகளின் வான்படையின் முதல் மாவீரர்கள் இவர்களே. இவர்கள் இருவரதும் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் 'நீலப்புலிகள்' என்ற தேசிய விருதும் இவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதில் லெப்.கேணல் சிரித்திரன் 5 தடவைகளாக வான்புலிகளால் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் பங்கேற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக அநுராதபுரம் படைத்தளம் மீதான வான்தாக்குதலில் இவர் சிறப்பாக செயற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



0 comments:
Post a Comment