


துப்பாக்கி முனையில் கல்வி.... துப்பாக்கி முனையில் குளியல்... என்ன கொடுமை.... எமது சகோதர உறுவுகளுக்கு ...விசாரணையின் பேரில் கற்பழிப்புக்கள்.....யாருக்குத் தெரியும்.....உள்ளுக்குள் நடப்பவை??உலக நாடுகள் கூட சொல்லிப்பார்த்துவிட்டது அரசாங்கத்திற்கு வவுனியா அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு சுதந்திரமாக விடவேண்டும் என்று ஆனால் அரச தரப்பு குருடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கின்றது.ஒரு அகதி முகாமுக்குள்ளேயே எமது மக்களால் சுதந்திரமாக சுபீட்சமாக வாழ முடியாத நிலையில் எப்படி இந்த நாட்டில் தமிழ் மக்களால் சுபீட்சமாகவும் சுதந்திரமாகவும் வாழ முடியும்.தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிøமயைக் கொடுப்போம் அவர்களுக்கும் சம அந்தஸ்து கொடுப்போம் என்று மஹிந்த அரசாங்கம் சொல்வது... நடக்காத காரியம். இதை இந்தியா நம்பி (சேர்ந்து) தமிழர்களை அழிக்கும் நடவடிக்கைக்கு துணை போகின்றது.பிரிட்டன் அமெரிக்கா ஈழப்பிரச்சினையில் கொண்டிருக்கும் அக்கறை கூட இந்தியாவிடம் இல்லாதது தேச துரோகமே... அவர்களின் பாணியில் சொன்னால் இந்திய இறையாண்மைக்கு எதிராகவே செய்துகொண்டிருக்கின்றது. 
வெளிநாடுகள் போர்ரை நிறுத்துமாறு வேண்டிக் கொண்டவுடன் இந்தியா விழுந்து அடித்துக்கொண்டு மக்களை போரில் இருந்து காப்பற்றவேண்டும் என்று பிரணாப் கூறுவது சிரிப்பாகவே இருக்கின்றது.ஐ.நா.வின் அறிக்கைகளைப் பார்த்து இந்தியா பயந்து விட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.ஐ.நா.படைகளை இலங்கைக்கு அனுப்பு என்று உலக நாடுகள் பல வற்றில் தமிழர்கள் போராட்டம் மட்டும் மல்ல தீக்குளிப்புக்களையும் நிகழத்திக்கொண்டிருக்கின்ற வேளையில்....சில நேரம் ஐ.நா படைகள் வந்தால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து. பாக்குநீரினையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களின் வருகை... இந்தியாவின் சகோதர நாடான இலங்கையால் இந்தியாவுக்கு ஆபத்து. குரங்கு ஆப்பு இழுத்த கதையாகத்தான் இந்தியாவின் நிலை மாறப்போகின்றது என்பது நிதர்சனம்.
 

 


0 comments:
Post a Comment