
இப்பகுதியில் இரவு நேரங்களில் கற்பழிக்கப்படுகின்ற பெண்களின் கூக்குரல் சத்தம் கேட்டுக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா மற்றும் விசுவமடு இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களால் இராணுவத்தினரின் திரைமறைவிலான இந்தக்கொடுமைகளால் தமது பல பிள்ளைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது பிள்ளைகள் தொடர்பாக பெற்றோர் இராணுவத்தினரை வினவியபோதும் அவர்களுக்கு எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.
வவுனியா இடைத்தங்கல் முகாமிற்கு ஐ.நா. பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் விஜயம் செய்தபோது தாய் ஒருவர் தனது மகனை இராணுவத்தினர் கடத்திச் சென்றுள்ளதாகத் தமிழில் தெரிவித்தார். ஆனால் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் விடுதலைப் புலிளே தமது மகனை கடத்திச் சென்றுள்ளனர் என அந்தத்தாய் தெரிவிப்பதாக கோல்ம்ஸிடம் மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் கூறியுள்ளார். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வன்னிப் பிரதேசங்களில் அகப்படுககின்ற பொதுமக்கள் தொடர்பில் எந்தத்தடையும் இன்றி இராணுவத்தினர் தமது விருப்பத்திற்கேற்ப செயற்படும் வகையில் இராணுவத் தலைமைகளினால் இராணுவத்தினருக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ உயர்மட்ட அதிகாரி ஒருவரிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.
0 comments:
Post a Comment