
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள சொறிக்கல்முனை யில் நேற்று வெள்ளிக் கிழமை (13-03-2009) அதிகாலை 02.05 மணியளவில் கருணா ஆயுததாரிகள் குழுவின் மினி முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதல் ஒன்றில் நான்கு கருணா குழு ஆயுததாரிகள் கொல்லப் பட்டுள்ளதாகவும் அவ் முகாமி லிருந்து ரி56 ரக துப்பாக்கிகள் மூன்றும் தம்மால் கைப்பற்றப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலை புலிகள் தெரிவித்துள்ளனர். இவ்மினி முகாமானது தற்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ள கருணாவின் அலுவலகமாகவும் செயற்பட்டு வந்துள்ளது. கடந்த 07ம் திகதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடம் ஆயுதக்களைவு என்ற நாடகத்தை சிறிலங்கா அரசு அரங்கேற்றியது. இந்நிலையில் ஆயுதக்குழு அலுவலகம் ஒன்றிலிருந்து புலிகள் ஆயுதங்களை எடுத்துச் சென்றுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவித்திருப்பது சிறிலங்கா அரசின் போலியான செயற்பாடுகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் செயலாக அமைந்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து அமைச்சுப்பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டு அரச அதிகாரத்தையும், ஆயுத பலத்தையும் வைத்துக்கொண்டு கருணா தமிழ் மக்கள் மீது மிகக்கடுமையான முறையில் ஆயுத வன்முறை பிரயோகத்தை மேற்கொண்டுவருகின்றார். அண்மையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்வதற்காக கொழும்பு வருமாறு கருணா அணியினரால் விடுக்கப்பட்டு வேண்டுகோளினை புறக்கணித்த மக்கள் மீது இவ் ஆயுததாரிகளே தாக்குதல்களை மேற்கொண்டிருந்தாகவும் தெரிகின்றது. ஆயுதக்குழுக்களிடமிருந்து ஆயுதக்களைவு என்பது ஒரு போலிநாடகம் என்ற கருத்தை வெளியுலகத்திற்கு காட்டவே புலிகள் இத்தாக்குதலினை மேற்கொண்டிருப்பதாகவும் புலிகளுடன் தொடர்புடைய வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
0 comments:
Post a Comment