 அடைவு நகைகளை மீட்பதற்காக வைத்திருந்த சுமார் ஒருலட்சத்து 50ஆயிரம் ரூபா பணத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது-
அடைவு நகைகளை மீட்பதற்காக வைத்திருந்த சுமார் ஒருலட்சத்து 50ஆயிரம் ரூபா பணத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது-கடந்த 25ம் திகதி களுவாஞ்சிக்குடியில் உள்ள இலங்கை வங்கி கிளையில் அடைவு நகைகளை மீட்பதற்காக கோட்டைக் கல்லாற்றிலுள்ள தனது வீட்டிலிருந்து மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவேளை ஓந்தாச்சிமடம் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் மறிக்கப்பட்டதாகவும் இவர்களைப் விசாரித்து இவர்கள் செல்வதற்கான காரணத்தையும் அறிந்து கொண்ட அதிரடிப்படையினர். கடிதக் கவர் ஒன்றைக் கொடுத்து களுவாஞ்சிக்குடியிலுள்ள விசேட அதிரடிப் படைமுகாமிலுள்ள ஜயதிலக என்பவரிடம் அக்கவரைக் கொடுக்கும்படி கூறியுள்ளனர்.
மனைவியை வங்கியில் இறக்கி விட்டு கடிதத்தை ஒப்படைப்பதற்காக சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த நகைத் தொழிலாளியான பூபாலசிங்கம் சிறீதரராஜா வயது35 என்பவரே இவ்வாறு காணாமல் போனவராவார்.
இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திலும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
 

 


0 comments:
Post a Comment