தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » கடந்த இரு நாட்களில் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறிய 45 ஆயிரம் பேர் எங்கே?

கடந்த இரு நாட்களில் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறிய 45 ஆயிரம் பேர் எங்கே?

Written By paadumeen on Wednesday, April 22, 2009 | 7:31 PM

பாதுகாப்பு வலயத்தின் மீது படையினர் நடத்திய பாரிய தாக்குதல்களைத் தொட ர்ந்து கடந்த இரண்டு நாட்களிலும் 56 ஆயிரம் பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக அரசாங்கத் தக வல்கள் தெரிவிக்கின்ற போதிலும் சுமார் 10 ஆயிரம் பேர் மட்டுமே நலன்புரி முகா ம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய சுமார் 45 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது. பாதுகாப்பு வலயத்தின் மீது பல முனைகளில் சிறிலங்கா படையினர் நேற்று முன்நாள் திங்கட்கிழமை அதிகாலை தொடுத்த பாரிய தாக்குதலையடுத்து அங்கிருக்க முடியாத பெரும் தொகையானவர்கள் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்கணை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறி இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர். கடல்வழியாக வெளியேறிய சுமார் 3 ஆயிரம் பேர் படகுகள் மூலமாக பருத்தித்துறையைச் சென்றடைந்திருக்கின்றனர். இவர்கள் பின்னர் அங்கிருந்து இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டு தென்மராட்சிப் பகுதியில் உள்ள நலன்புரி முகாம்களில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளையில் நந்திக் கடலைத்தாண்டி புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதியால் தரைவழியாக வெளியேறியவர்கள் படையினரால் கிளிநொச்சி மற்றும் முல்லை த்தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற கடுமையான விசாரணை களையடுத்து வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களில் இவ்வாறு வெளியேறியவர்களில் சுமார் 6 ஆயிரத்து 500 பேர் மட்டுமே வவுனியாவுக்குக் கொண்டுவரப்பட்டு ஓமந்தைப் பகுதியில் உள்ள முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கொண்டுவரப்பட்ட வர்களில் பலர் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டனர். வெளித்தொடர்புகள் எதுவும் அற்ற நிலையிலேயே இவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கு சென்ற சுமார் 3 ஆயிரம் பேரையும் வவுனியாவுக்கு வந்த சுமார் 6 ஆயிரத்து 500 பேரையும் தவிர்த்தால் அரசாங்கம் தெரிவித்த 56 ஆயிரம் பேரில் மீதியாகவுள்ள சுமார் 45 ஆயிரம் பேருக்கு என்ன நடந்தது எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றார் மனித உரிமைவாதி ஒருவர்.
இவ்வாறு வந்தவர்களில் பெரும் தொகையானவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களில் வைக்கப்பட்டு கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரி விக்கின்றன. இந்த இடைத்தங்கல் இடைத்தங்கல் முகாம்கள்தான் வன்னியில் இருந்து வரும் மக்களை ‘வடிகட்டும்’ முகாம்களாகவும் இருப்பதால் இந்த முகாம்களில் பாரியளவிலான சித்திரவதைகளும் மனித உரிமைகள் மீறல்களும் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக மனித உரிமைவாதிகள் பெரும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment