 விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்திருப்பவை குறித்து கருத்து தெரிவிப்பதிலிருந்தும் தூர விலகி நிற்கும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகளான பிரியங்கா காந்தி வதேரா இந்த விடயம் தனக்கு தனிப்பட்டதும் அரசியல் சம்பந்தப்பட்டதுமென கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்திருப்பவை குறித்து கருத்து தெரிவிப்பதிலிருந்தும் தூர விலகி நிற்கும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகளான பிரியங்கா காந்தி வதேரா இந்த விடயம் தனக்கு தனிப்பட்டதும் அரசியல் சம்பந்தப்பட்டதுமென கூறியுள்ளார்.இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக நீதியை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் தனது சகோதரர் ராகுல் காந்தியும் நானும் ஒரே விதமான கருத்தை கொண்டிருக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
ராகுலும் இந்த விடயத்தில் சிறியளவு வேறுபாடுகளை சில சமயம் வெளிப்படுத்தியிருக்க கூடும். ராகுலை நான் அறிவேன். அவரது இதயத்தில் ஆத்திரம் இல்லை. வெறுப்பு இல்லை. நீதி முறைமை நீண்ட காலம் எடுப்பது பற்றியே அவர் குறிப்பிட்டுள்ளார் என்று பிரியங்கா கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை சிறையில் சென்று சந்தித்திருந்த பிரியங்காவிடம் நளினியை மன்னித்து விட்டீர்களா? என்று கேட்ட போது அவரை மன்னிக்க நான் யாரும் அல்ல என்று கூறியுள்ளார்.
இதேவேளை பிரபாகரன் தனது நல்ல நண்பர் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்த விடயத்தில் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதை நிராகரித்து விட்டார்.
அவர் (கருணாநிதி) புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக ஆரம்பிக்கவில்லை என்று கூறியிருந்தார். இப்போது தனது அறிக்கையை அவர் மாற்றி விட்டார். எனக்கு இது தனிப்பட்ட மற்றும் அரசியல் விடயமாகும். ஆதலால் அது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று பிரியங்கா கூறியுள்ளார்.
 

 


0 comments:
Post a Comment