 யாழ். மாவட்டத்துக்கு வன்னியிலிருந்து பெரு மளவான அகதிகள் வருவதால் அவர்களை தங்க வைக்க இரு புதிய நலன்புரி நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்துக்கு வன்னியிலிருந்து பெரு மளவான அகதிகள் வருவதால் அவர்களை தங்க வைக்க இரு புதிய நலன்புரி நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தற்போது புதிதாக கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலத்திலும், சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் நலன்புரி நிலையத்தில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் தொடர்ந்தும் வருகை தருவதால் அவர்களை மிருசுவில் றோமன் பாடசாலையில் இயங்கும் அகதிகளை பதிவு செய்யும் நிலையத்தில் பதிவு செய்த பின்னர் புதிதாக திறக்கப்பட்ட நலன்புரி நிவையங்களுக்கு தென்மராட்சி பிரதேச செயலக அதிகாரிகள் அனுப்பி வைத்து வருகின்றனர். கைதடி பனை, தென்னை வள அபிவிருத்தி ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அதிக குடிசைகளை நிர்மாணிப் பதற்கும் அங்கு பதினைந்து மலசலகூடங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து குடாநாட்டின் சகல பாடசாலைகளையும் ஒருவாரம் மூடுவதற்கும் அவசர பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை யாழ்ப்பாணம் வந்த அகதிகள் எண்ணிக்கை 6,476 ஆக அதிகரித்துள்ளது.
 

 


0 comments:
Post a Comment