
கப்பம் கொடுக்கமறுத்த பேராதனை விதியிலுள்ள வர்த்தகர் ஒருவரது வீட்டுக்கு கடந்த இரண்டநாட்களக்கு மன் கிரனைட்டும் எறிந்துள்ளார்கள். மற்றுமொரு வர்த்தகரின் வீட்டின் கதவினைத் தட்டி பிஸ்டல் ரவையைக் காட்டி இதைப் பிடித்துப் பாருங்கள் இந்த நிலைதான் உங்களுக்கும் என கூறியிருக்கிறார்கள். அவர்கள் தமிழைத் தெளிவாக கதைப்பதாகவும். கருணா குழுவினர் என்று தம்மை அறிமுகப்படுத்தவதாகவும் இவர்களுடன் கூட வரும் சிங்கள இளைஞர்கள் இராணுவத்திலிருப்பவர்களைப் போன்று இருப்ப தாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அச்சமடைந்த வர்த்தகர்கள் கருணாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். அதற்கு கண்டியில் தமது அமைப்புக்கு எந்தவித தொடர்பும் இல்லையென்றும். கப்பம் வாங்குவதற்கு தமக்கு அவசியமில்லை யென்றும் கருணா மறுத்துள்ளார். கண்டிபொலிஸாரிடம் வர்த்தகர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தததையிட்டு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக் கையில் இராணுவத்திலிருந்து தப்பிவந்தவர் ஒருவர் கைதுசெய்யப் பட்டுள்ளார். இவரது பெயர் சனிபாபா என தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட வங்கி இலக்கங்களை ஆராய்ந்த பொழுது சம்பத் வங்கிக்குரிய அந்தக்கணக்கு கொழும்பிலுள்ள சிங்களப் பெண்ணுக்குரியது என்றும் மற்றை யது கொழும்பு கொமர்ஷல் வங்கியில் கணக்கு வைத்துள்ள முஸ்லிம் ஒருவருடையது என்றும் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment