தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » கிளிநொச்சியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்! அதிகாரி ஒருவருக்கு காயமாம்!

கிளிநொச்சியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்! அதிகாரி ஒருவருக்கு காயமாம்!

Written By paadumeen on Wednesday, April 8, 2009 | 2:46 AM

படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேச மான கிளிநொச்சியில் நேற்று தற் கொலைக் குண்டுத் தாக்குதலொன்று இடம் பெற்றுள்ளதாக இராணுவத்தை மேற்கோள்காட்டிய செய்திகள் தெரிவிக் கின்றன. கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் பெண் தற்கொலைக்குண்டு தாரியொருவர் தனது உடம்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்க வைத்த தாகவும் இதன்போது உயர் இராணுவ அதிகாரியொருவர் காயமடைந்ததாகவும் படைத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்பிரதேசத்தில் நடமாடிய அப்பெண்ணின் மீது சந்தேகங்கொண்ட படையினர் சோதனைசெய்ய முயன்றபோதே அப்பெண் குண்டை வெடிக்கச் செய்ததாகவும் இதனால் தமது தரப்பில் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகவும் அச் செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment