
கல்முனைப் பாண்டிருப்பு பிரதேசத்தில் நேற்று காலை (07-04-2009) சுற்றி வளைக்கப்பட்டு பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்று நடத்தப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணியளவில் பாண்டிருப்பு பிரதேசத்தின் முதலாம் குறிச்சி இரண்டாங்குறிச்சி மற்றும் மருதமுனை ஆகிய கிராமங்களை சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர். இதன்போது இரண்டு பெண்கள் உட்பட 25 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படடு விசாரிக்கப்படடு வருகின்றனர். நேற்று நண்பகல் வரை தொடர்ந்த இந்த தேடுதல் நடவடிக்கையில் பெருமளவான பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன். வீடுவீடாகச் சென்ற இவர்கள் வீட்டிலிருந்தவர்களின் குடும்பவிபரங்கள் மற்றும் தொழில் போன்றவற்றை விசாரித்து குறித்துக் கொண்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தேடுதல் நடவடிக்கையின்போது பயங்கரவாத தடுப்பு பொலிஸ்பிரிவைச் சேர்ந்த சிலரும் இவர்களுடன் கூட வந்திருந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் நேற்று மாலைவரை கல்முனை பொலிஸ் நிலையம் முன்பாக கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அழுதவண்ணம் நின்றதைக் காணக்கூடியதாகவிருந்தது. இன்று இரவு 10 மணிவரை சுற்றிவளைக்கப்பட்ட பிரதேசங்களில் விசேட அதிரடிப் படையினரின் மோட்டார்சைக்கிள் படைப் பிரினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் பீதியடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment