தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » வவுணதீவில் அதிரடிப்படையினரால் இளைஞர் சுட்டுக்கொலை!!

வவுணதீவில் அதிரடிப்படையினரால் இளைஞர் சுட்டுக்கொலை!!

Written By paadumeen on Sunday, April 26, 2009 | 3:45 AM

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியிலுள்ள முல்ல முனையில் வைத்து இளைஞர் ஒருவர் நேற்று (25-04-2009) காலை விசேட அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்டவர் வவுணதீவு பத்தரைக் கட்டையைச் சேர்ந்த 28 வயதான வீரசிங்கம் ரவீச்சந்திரன் என்று தெரியவருகின்றது. இவர் ஒரு பால் வியாபாரி என்பதோடு ஒரு பிள்ளையின் தந்தையுமாவார். மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் போராளி குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் புலிகளு க்கு உதவுகின்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலரை சிறிலங்கா படையினர் கைது செய்வதனையும் சுட்டுக்கொன்று வருவதனையும் அண்மை நாட்களாக மட்டக்களப்பில் காணமுடிகின்றது. நேற்று காலை தனது சைக்கி ளில் வீட்டி லிருந்து பால் கொள்வனவுக்காக சென்று கொண்டிருந்த போது வீதியில் வைத்துச் சுடப்பட்டார்.
அதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூவர் காணாமல் போனமை தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைக் குழுவிலும் பொலிசிலும் முறையிடப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி செங்கலடி கணபதி நகரைச் சேர்ந்த சண்முகராசா கமலானந்தராஜா (வயது 25) தனது வீட்டிலிருந்து சகோதரியின் வீட்டுக்குச் சென்றதாகவும் அதன் பின்னர் இதுவரை அவர் வீடு திரும்பவில்லை என்றும் உறவினர்கள் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment