
மட்டக்களப்பு புல்லுமலை, கோப்பாவெளி பகுதியிலி ருந்து ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோப்பாவெளியைச் சேர்ந்த 52 வய தான அமரசிங்க ஜெயசேகரன் என்ற தமிழரே இவ் வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த வாரம் இவர் கால்நடை மேய்ப்பதற்காக புல்லுமலை வனப்பகு திக்குள் சென்றதாகவும் இதுவரையில் இவர் வீடு திரும்பவில்லையெனவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதேவேளை இவரை விசேட அதிரடிப் படையின ரே கைது செய்து கோப்பாவெளி படைமுகாமில் தடுத்து வைத்திருப்பதாக வும் தற்பொழுது தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு பகுதி களில் அமைந்துள்ள வனப்பகுதிகளில் கால்நடை மேய்ச்சலுக்காக கால் நடை களை அழைத்துச் செல்பவர்கள் மீது விசேட அதிரடிப்படையினர் துன்புறுத்தி வருவதுடன் பலரை கைது செய்து தாக்கிவருவதாகவும் அப்பகுதி மக்க ள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment