தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » காணாமல்போன பெண்ணின் சடலம் மீட்பு!!

காணாமல்போன பெண்ணின் சடலம் மீட்பு!!

Written By paadumeen on Sunday, May 3, 2009 | 9:48 PM

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திலிருந்து காணாமல் போன பெண் ஒருவரினது சடலம் இன்று (03-05-2009) வாழைச்சேனைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 40 நாட்களுக்கு முன்னதாக வாழைச்சேனை பகுதிக்கு நேர்முகப் பரீட்சை ஒன்றிற்காக சமூக மளிக்கச்சென்ற வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒரு குழந்தையின் தாயான ஆறுமுகம் வனஜா என்பவரே வாழைச்சேனைப பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக கருணா குழு முக்கிய உறுப்பினர் றொசான் என்பவருடன் பணியாற்றும் 35 வயதுடைய ராஜன் ஜெகன் என்பவர் வாகரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலை அடுத்தே மேற்படி யுவதியின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இக்கொலையுடன் மேலும் சில கருணா குழு உறுப்பினர்கள் பின்னணியில் இருப்பதாகவும் தெரியவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு இவ்வுவதியை வரவழைக்கும் நோக்கில் இவர்களே நேர்முகப்பரீட்சை ஒன்றிற்காக வருமாறு போலியான கடிதம் ஒன்றை தயார் செய்து வரவழைத்துள்ளதாகவும் தகவலொன்று தெரிவிக்கின்றது.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment