
கல்கிசையில் பாதை குண்டுவெடிப்பு சம்பவம் தொட ர்பாக கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேக நபர்களை யும் பயங்கரவாத தடுப்பு விசாரணைப்பிரிவு பொலி ஸாரிடம் ஒப்படைக்கும்படி கல்கிசை நீதிமன்றம் கல்கிசை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 7 ஆந் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக பி.சிவனேசன், சி.சிவதீபன், எஸ். மணிவாளன், பி.சிந்திரன், எஸ். யோகரூபன், எம்.விமலநாதன், கே.பி. உதயஜீவன், என்.சுதாகரன், பி.யோகதாசன், எம். சுரேஸ், பி.றொசிதாகரன், ஜீ.பிரசாட் மற்றும் பி.அமிர்தகுமார் ஆகியோர் சந்தேகத்தில் கைது செய்யப் பட்டனர்.
இவர்கள் கல்கிசை கடற்கரையில் மதுபானம் அருந்திவிட்டு ரயில் பாதையில் குண்டை வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். முதலில் ஒரு நபர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு அவரின் வாக்குமூலத்தை தொடர்ந்து ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததை யடுத்து சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்பு விசாரணைப்பிரிவு பொலிஸா ரிடம் ஒப்படைக்குமாறு கலகிசை நீதவான் ஹர்லா சேதுங்க உத்தரவிட்டார். மேல் மாதம் அடுத்தமாதம் ஒத்திவைக்கபட்டது.
0 comments:
Post a Comment