
இச்சந்திப்பில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் துரித கதியில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். இதற்கு சமமாக வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களையும் குடியேற்ற வேண்டுமென அதன் பொதுச்செயலாளர் ஹசன் அலி கோரிக்கை விடுத்துள் ளார். யுத்தம் முடிந்த நிலையில் மக்கள் மனநிம்மதியுடன் வாழ அச்சமற்ற சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இதற்கு ஆயுதக் குழுக்களிட மிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும். மற்றும் குடியமர்த்தல் மீள் கட்டமைப்புக் கு அரசியல் வேறுபாடு களையப்பட்டு சகலரும் சேர்ந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இத்தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள தலைமைத்துவங்களை இனம் காணப்பட வேண்டும். இதற்கு அவர்கள் சுதந்திர மான ஜனநாயக வழியில் இயற்கையான தெரிவிற்கு வழி வகுக்க வேண்டும். இதன் மூலமே ஒற்றுமையுடன் சகவாழ்வையும் ஏற்படுத்த முடியுமெனவும் தாம் கூறியதாக அவர் தெரிவித்தார். இவற்றுக்கு இந்தியா பங்களிப்புச் செய்யு மாறு கேட்டுக் கொண்டுதாகவும் இதனை அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். இச்சந்திப்பில் இலங்கைக்கான இந்திய தூதரக உயர் ஸ்தானிகர் ஆலோசகர் பிரசாத் மற்றும் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஷாமும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment