தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » எம் துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல - யாழ் செல்லும் படையணி தளபதி வெற்றிக்குமரன்!

எம் துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல - யாழ் செல்லும் படையணி தளபதி வெற்றிக்குமரன்!

Written By paadumeen on Sunday, May 24, 2009 | 10:08 AM

யாழ்.குடாநாட்டில் மறைவாக உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை 48மணி நேரத்துள் படையினரிடம் சரணடைய வேண்டுமென யாழ் மாவட்ட இராணுவத் தளபதி கேட்டுள்ளார் என்ற செய்தியை அடுத்து புலிகளின் யாழ் செல்லும் படையணி தளபதி வெற்றிக்குமரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், "எம் துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல, உரிய நேரத்தில் தலைமை யின் உத்தரவிற்காக காத்திருக்கின்றோம்" என்று யாழ்ப்பா ணத்தில் இருந்து தெரிவித்தார். எம் போராளிகள் என்றும் இல்லாத அளவு மிக உறுதியுடன் போராடத் தயாராக இருப்பதாகவும் சிங்கள இராணுவ பசப்பு வார்த்தைகளுக்கு மயங்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சிங்கள இராணுவம் இன்று பாரிய உளவியல் மற்றும் மறைமுக புலனாய்வு யுத்தத்தை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் மக்களை மிகவும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் புலிகளின் யாழ் செல்லும் படை யணி தளபதி வெற்றிக்குமரன் கேட்டுள்ளார்.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment