அப்போது அருகில் வியாபாரம் செய்துகொண்டிருந்த தமிழ்பேசும் இளைஞன் ஒருவர் இதனை அவதானித்து விட்டு புறக்கோட்டை பொலிஸாருக்குத் தகவ ல் கொடுத்துள்ளார். உடனடியாக நடைபாதை வியாபாரம் அமைந்துள்ள இடத் துக்கு விரைந்த பொலிஸார் அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த குறித்த தமிழ் இளைஞனை கைது செய்துள்ளனர். இவர் தற்போது புறக்கோட்டை பொ லிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து கோட்டை புறக்கோட்டை பகுதிகளில் உள்ள வர்த்த கர்கள் பிரபாகரன் உயிருடன் இருப்பது பற்றி எதுவுமே பேசுவதில்லை. மேலு ம் பொரளை, புறக்கோட்டை, வெள்ளவத்தை, தெஹிவளை ஆகிய தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் பெருமளவான கடற்படை மற்றும் இராணுவத் தினருடன் இராணுவப் புலனாய்வுப்பிரிவினரும் நடமாடி வருவதுடன் வீதிக ளில் செல்லும் தமிழர்கள் பலர் சோதனைகளுக்கும் விசாரணைகளுக்கும் உட் பட்டு வருவதாக கொழும்புத் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment