
வன்னிப் பிரதேசங்களிலிருந்து வெளியேறி வவுனியா வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் கிளிநொச்சியில் அமைக்கப்பட் டுள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு விசாரணைகளுக் கும் சித்திரவதைகள் மற்றும் துன்புறுத்தல் களுக்கு உள்ளாக்கப்படுவதாக வவுனியாவிலி ருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின் றன. முள்ளிவாய்க்கால் பகுதியில் தமது இறுதிக்கட்டத் தாக்குதலை மேற் கொண்ட படையினர், அங்கு போரில் சம்பந்தப்படாத பல்லாயிரக்கணக்கான வர்களைக் கைது செய்து கும்பல் கும்பலாக கிளிநொச்சிக்குக் கொண்டுவந்தி ருக்கின்றனர். இவ்வாறு கொண்டுவரப்பட்டவர்கள் கிளிநொச்சியில் எந்தவிதமா ன அடிப்படை வசதிகளும் இல்லாத சில முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டி ருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரபூர்வமாகக் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி 56 ஆயிரத்து 361 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 70 ஆயிரத்து 553 பேர் வவுனியாவில் உள்ள முகாம்களுக்கு கடந்த சனிக்கிழமை (16.05.09) வரையில் அனுப்பப்பட் டுள்ளனர். இதனைவிட கிளிநொச்சி முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்ட ஏனை யவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இவர்கள் கிளிநொச்சியில் உள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளையில் இராணு வத் தளபதி சரத்பொன்சேகா நேற்று முன்தினம் கிளிநொச்சிக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
0 comments:
Post a Comment