
கல்முனைபிரதேச செயலகத்திற்குட் பட்ட இஸ்லா மாபாத் வீட்டுத் திட்ட மக்களது நீர்ப்பிரச்சினை தொடர்பாக அண்மைக் காலமாக ஆர்ப்பாட் டங்கள் மற்றும் பிரதேசசெயலக முற்றுகை போன்றன நடைபெற்று பின் அது நீதிமன்றம் வரை சென்றதைத் தொடர்ந்து கடந்த வாரம் முற்றாக நீரை துண்டிப்பதற்கு நீர் வளங்கள் மற்றும் வடிகால் அமைப்புச் சபையினர் வந்த வேளையில் மக்கள் ஒன்று கூடி நீரை வெட்டுவதற்குப் பதிலாக எம் தலையை வெட்டுங்கள் என கூறி அவ்விடத்தில் திரண்டதனால் செய்வதறியாத அதிகாரிகள் பொலி ஸில் முறைப்பாடு செய்தனர். மீண்டும் அவ்வதிகாரிகள் வரக்கூடும் என எதிர்பார்த்து மக்கள் குடியேற்றவாசல் கதவுகளை மூடிக் கொண்டு அவதானமாக வீதிகளில் காணப்பட்டனர்.
பிற்பகல் பொலிஸாருடன் நீர் வளங்கள் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் அதிகாரிகளும் வந்து நீரை துண்டிக்க முற்பட்டபோது தொலை பேசியில் நீர்வளங்கள் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் ஹைதர் அலியுடன் பாறாளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி பேசியதன் பின் அவ்வதிகாரிகளும் பொலிசாரும் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றனர்.
இது தொடர்பாக நீர் வளங்கள் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் ஹைதர் அலியுடன் தொடர்பு கொண்ட போது பிரச்சினை எமக்கும் மக்களுக்கும் அல்ல அவர்களுக்கு இவ் வீட்டுத்திட்டம் அமைத்த காலம் தொடக்கம் சட்டப்படி முடிந்த உதவிகளை எமது சபை செய்துள்ளது. அதே போல் இருக்கும் நிலுவையை கட்ட வேண்டியதும் அவர்களுடைய கடமை இதற்குள் வேறு பிரச்சினை இருப்பதை எமது அதிகார சபைக்குச் சொல்லுவது பொருத்தமற்றது இருந்தும் மனிதாபிமான அடிப்படையிலும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டிக் கொண்டதற்கும் அமைய ஒரு வாரம் தவணை கொடுத்துள்ளோம் அதற்குள் இப்பிரச்சினை திர்க்கப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது தவிர்க்க முடியாது எனக் கூறினார்.
இதே வேளையில் பாறாளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலியிடம் தொடர்பு கொண்ட போது சட்டப்படி ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டு அவ்வமைப்பிடம் மக்கள் இதற்கான பணத்தையும் வழங்கியுள்ளனர். அவர்களும் அப்பணத்தைக் கட்டியும் உள்ளனர் அதற்குள் நிலுவையும் ஏற்பட்டுள்ளது. இதற்காக மக்களை தண்டிக்கக்கூடாது அது முறையும்மல்ல சம்மந்தப்பட்ட நிருவாத்தைத்தான் கேள்வி கேட்க வேண்டும.; மக்களை பாதிக்கும் எந்த நடவடிக்கைகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனுமதிக்கமாட்டாது எனக் கூறியதோடு விரைவில் சம்மந்தப்பட்ட இரு சாராரையும் நான் சந்தித்துப் பேசுவேன் எனவும் கூறினார்.
0 comments:
Post a Comment