தற்பொழுது பரீட்சார்த்த சேவையில் இருக்கிறது. உங்களது கருத்துக்களை அனுப்ப padumeen@gmail.com
Home » » மட்டு ஆணையாளர் சிவநாதனின் சில்மிஸங்கள்

மட்டு ஆணையாளர் சிவநாதனின் சில்மிஸங்கள்

Written By paadumeen on Thursday, March 24, 2011 | 7:42 PM

மட்டக்களப்பு மாவட்ட மாநகரசபை ஆணையாளர் சிவநாதன் அண்மைக்காலமாக தவறானபல குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலுவலகத்திலிருக்கும் பெண்பிள்ளைகளை அழைத்து கதவை மூடி விட்டு நெடுநேரம் கதைத்துக்கொண்டிருப்பதாகவும், தன்னை யாராவது சந்திக்கவந்தால் அவர்களை உடனே அனுமதிக்க வேண்டாம் என அங்குள்ள வேலையாட்களிடம் கட்டளையிடுவ தாகவும் அலுவலகத்திற்கு சென்றுவரும் பொதுமக்கள் தெரிவித் துள்ளனர்.

இதேவேளை அலுவலக நேரத்தில் பெண்களுடன் தனது அறையில் இவர் உல்லாசமாக இருந்ததையும் அங்கு வேலைசெய்பவர்கள் நேரில் கண்டிருக்கின் றனர்.

மேலும் அண்மையில் மாநகரசபைக்குச் சொந்தமான கட்டிடப் பொருட்கள் மாநகரசபைக் கட்டிடத்தில் இறக்கப்பட்டிருந்ததாகவும். அதில் அரைவாசியை, வேறு செயற்பாடுகளுக்கென தனது பொறுப் பில் அனுப்பிய பின்னர் தற்போது அப்பொருட்களைக் காணவில்லை எனவும், இதற்கு மாநகரசபைப் பொறியியலாளரே பொறுப்பு எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கிடையில் அவரது உறவினர் வீட்டிற்கு அக்கட்டிடப்பொருட்கள் கொண்டு செல்லப்பட இருந்த தாகவும் அப்பொருட்கள் இதுவரை எங்கு எடுத்துச் செல்லப்பட்டன என்பது பற்றி மாநகரசபை முதல்வர் விசாரணையை நடத்தி வருவதாகவும் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.

மதிப்புமிக்கதொரு பதவியில் இருந்து கொண்டு இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தல் வேண்டும். 2003 காலப் பகுதியில் இவ்வாறான தவறான நடத்தையில் ஈடுபட்டபோது மட்டக்களப்பு ஏரன்ஸ்லேன் பகுதியில் வைத்து பொதுமக்களால் நையப் புடைக்கப்பட்டு வீதியில் ஓடியவர் என்பதும் பின்னர் விடுதலைப்புலிகளால் தண்டிக்கப் பட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவர் அலுவலக நேரத்தில் பெண்ணொருவருடன் உல்லாசமாக இருந்ததற்கு ஆதாரமான கைத் தொலைபேசி கமராவினால் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று எமக்குக் கிடைத்துள்ளது. நாகரிகம் கருதி அதை இங்கே பதியவில்லை.

0 comments:

Spoiler Untuk lihat komentar yang masuk:

Post a Comment