
களனியில் இப்போது கப்பம் எடுத்தல் கப்பம் கொடுத்தல் போன்ற சட்டவிரோத நிகழ்வுகள் முடிவு பெற்றிருக்கிறதென்று பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ அலரி மாளிகையில் நடந்த பத்திரிகை ஆசிரியர்களின் கூட்டத்தில் தெரிவித்தார். களனியில் இரண்டு அரசியல் குழுக்களுக்கி டையில் நடைபெற்ற கருத்து மோதல் குறித்து பொலிஸ் மற்றும் இலஞ்ச ஆணைக் குழுவின் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறதென் றும் இதுபற்றி சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஒழுக்காற்று விசாரணைகளை நடத்திக் கொண்டிருப்பதாகவும் கூறினார். இப்போது களனி தொகுதியில் அமைதி நிலவு வதுடன் அபிவிருத்தி பணிகளும் சிறப்பாக நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment