
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி நான்காம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய ப்படவுள்ள சிறைக் கைதிகளில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இடம் பெறவி ல்லை என புனர்வாழ்வு மற்றும் சிறைச் சாலைகள் மீள் சீரமைப்பு அமைச்சு வட்டாரங் கள் தெரிவித்தன.இலங்கையின் சுதந்திர தினத்தன்று சரத் பொன்சேகா விடுதலை செய் யப்படலாம் என்ற அடிப்படையில் வெளியான செய்திகள் தொடர்பாக வினவிய போதே அந்த வட்டாரங்கள் இவ்வாறு தெரிவித் தன. இதேவேளை சிறிய குற்றங்களுக்காக அபராதம் செலுத்தத் தவறியவர்கள் வலது குறைந்தவர்கள் 70 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோரே சுதந்திர தினத் தன்று விடுதலை செய்யப்படவுள்ளனர் என அமைச்சின் செயலாளர் எஸ்.திஸா நாயக்க தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment