
மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தினால் சந்தேக நபர் என சேர்க்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட நாடாளுமன் ற உறுப்பினரான துமிந்த சில்வாவுக்குப் பதிலாக எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராக முடியாது என கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இன் றைய வழக்கு விசாரணையின் போது துமிந்த சில்வாவுக்கு பதிலாக ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய நீதி மன்றில் ஆஜராகியுள்ளார். துமிந்த சில்வா தொடர்பில் சமர்பிக்கப்பட்டுள்ள வைத்திய அறிக்கையை ஆராய்ந்து பார்க்கும் போது சட்டத்தரணி ஒருவருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு ஆலோசனை வழங்கும் அளவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வரும் துமிந்த சில்வாவுக்கு மன நிலை இல்லை எனத் தான் கருதுவதாக கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாராத லக்ஷ்மனின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய காமினி என்பவரை பிணையில் விடுவிக்கும் கோரிக்கைக்கு இரகசியப் பொலி ஸார் எதிர்ப்புத் தெரிவித்தனையடுத்து அனைத்துச் சந்தேகநபர்களையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment